பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!!உடனே விண்ணபிக்குமாறு தமிழக அரசு வேண்டுகோள்!!

0
144
Tamilnadu government request to apply for education scholarship for school students!!
Tamilnadu government request to apply for education scholarship for school students!!

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!!உடனே விண்ணபிக்குமாறு தமிழக அரசு வேண்டுகோள்!!

மாணவர்களின் நலன் கருதி செயல்படும் திட்டங்களில் தமிழக அரசானது பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது.இதன் மூலம் பல்வேறு ஏழை எளிய மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் ஏழை எளிய  மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. நடப்பு கல்வியாண்டில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை சட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணபிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த உதவித்தொகை பெற வேண்டும் என்றால் சில விதிமுறைகள் உள்ளது.அதன்படி உதவித்தொகை பெரும் மாணவர்களின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

அந்த வகையில் https://yet.nta.ac.in என்ற இணையதளத்தின் பட்டியலில் உள்ள பள்ளிகளில் 9 மற்றும் 11 வகுப்பு படிகின்ற மாணவர்களாக இருக்க வேண்டும்.இவ்வாறு இருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்கும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக 75000 ரூபாய் வரை உதவி தொகை வழங்கப்படும் மேலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 1.4 லட்சம் உதவி தொகை வழங்கப்படும்.

Previous articleநாளை மறுநாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!!
Next articleகன்னியாகுமரியில் கடல் சீற்றம்!! படகு போக்குவரத்து பாதிப்பு!!