பணியின் போது அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

0
146

பணியின் போது அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

தமிழக அரசுப் பணியாளர்கள் அனைவரும் அலுவலக வேலையின் போது அரசு வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை அணிய வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் பலர் வேலைக்கான அடையாள அட்டையை அணிவதில்லை என்று பல்வேறு புகார்கள் குவிந்த காரணத்தால், அரசு பணியாளர் நலன் மற்றும் சீர்திருத்தத்துறையின் மூலம் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வேலை நேரத்தின் போது ஒவ்வொரு அரசு ஊழியரும் கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிகிறார்களா இல்லையா என்பதை அந்தந்த துறை தலைவர்களும், மாவட்ட ஆட்சியர்களும் கண்காணிக்க வேண்டும்.

உத்தரவை பின்பற்றாமல் அடையாள அணியாமல் பணியாற்றினால், துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Previous articleபிரசாந்த் கிஷோர் மீது திருட்டு வழக்கு: திமுக அதிர்ச்சி
Next articleதமிழக சித்த மருத்துவரை அழைத்த சீன அரசு! கொரோனா வைரஸை குணப்படுத்த விரைவில் பயணம்?