காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசின் புதிய அரசாணை!! இனிமேல் இதனை கட்டாயம் செய்ய வேண்டும்!!
தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் காவல்துறையின் உயர் அதிகாரிகளை எளிதில் அணுகும் வகையில் புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பொதுவாக மக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்கள் ஆகியவற்றிற்கு சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளை நேரில் சந்தித்து புகார் மனுவை அளித்து வந்தனர். இது எப்போதும் பழக்கத்தில் உள்ள வழக்கமான முறையாகும். அதேபோல் உயர் அதிகாரிகள் பெயரளவில் ஒரு நாள் மக்களை சந்திப்பார்கள் என்ற நடைமுறையும் இருந்தது.
இந்த நிலையில் இவற்றை மாற்ற தமிழக அரசு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு புதிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது. இதை தொடர்பான தமிழக அரசின் அரசாணையில் மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்பிக்கள், மாதத்தில் ஒரு நாள் கட்டாயமாக பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிய வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட எஸ்பிக்கள் வாரந்தோறும் புதன்கிழமை அன்று காலை முதல் மாலை வரை ஆணையகரம் மற்றும் எஸ்.பி அலுவலகங்களில் பொதுமக்களை சந்தித்து அவர்களிடம் புகார் மனுக்களை பெற்று தொடர்பான விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவானது பொதுமக்கள் உயர் அதிகாரிகளை எளிதில் சந்திக்கும் வகையில் அரசு பிறப்பித்துள்ளது.