புதிய தொழில்களுக்கு பல சலுகைகள்!! தமிழக அரசு அறிவிப்பு!!

0
153

புதிய தொழில்களுக்கு பல சலுகைகள்!! தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த போதிலிருந்தே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பலவிதமான அறிவிப்புகளை செய்து வருகிறார். தமிழ்நாட்டில் இருந்து கண்டிப்பாக கொரோனாவை விரட்டுவோம் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு உள்ளார். இதனை அடுத்து வேலை இல்லாதோருக்கு அரசு மூலமாக வேலையும் கிடைத்து வருகிறது. மக்களின் அனைத்து வித பிரச்சனைகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்வு கண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழக மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று வந்துவிடக்கூடாது என்பதற்காக தேர்வு அனைத்தையும் ரத்து செய்து உள்ளார். இதன் மூலமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும், தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு தற்போது மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், புதிய தொழில் தொடங்கும் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கின்றது.

இதில் டெண்டரில் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பங்கேற்கும் போது விதிமுறைகள் தளர்த்தப்பட்டு சலுகைகள் அறிவிக்கப்பட உள்ளது. மேலும் அதன்படி புதிதாக தொடங்கிய சிறு மற்றும் குறு நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்கும்போது, வைப்புத்தொகை வைக்கத் தேவையில்லை என்றும் அதில் தெரிவித்து உள்ளது.

Previous articleஇரண்டு வாரத்திற்கு மேல் கொத்தமல்லி வீணாகாமல் இருக்க ஒரு சூப்பர் ஐடியா !! கொத்தமல்லியில் உள்ள நன்மைகள்!!
Next articleவிக்ரம் படத்தின் முதல் காட்சி!! வில்லன் இவர் தானாம்!!