ஸ்விங் பௌலிங்கில் திணறும் இந்திய டாப் வீரர்கள், நியூசிலாந்தின் புதிய யுக்தி?

0
112
Did India will sustain T20 WOrld cup series 2021?

T 20 உலக கோப்பை கிரிக்கட் போட்டி, துபாயில் ஷார்ஜாவில் உள்ள ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இது 12 டாப் நாடுகளை அட்டவணையில் இது வரை .கொண்டுள்ளது. இந்த அணிகள் க்ரூப் 1, க்ரூப் 2 என மொத்தம் ஆறு, ஆறு நாடுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

க்ரூப் 1:

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, ஸ்ரீலங்கா, வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ்.

க்ரூப் 2:

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நமீபியா, நியூசிலாந்து, இந்தியா, ஸ்காட்லந்து

மொத்த கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்க்கும் போட்டிகளம் என்றால் அது இந்தியா பாகிஸ்தான் ஆடும் ஆட்டம் தான். இந்திய-பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் மட்டுமல்லாமல் அடிப்படை ரீதியிலேயே பிரச்சனை என்பதால் இது அந்தந்த நாட்டின் கௌரவ பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தான் கடந்த வாரம் நடந்த போட்டியில் இந்தியா முதல் முறை தோற்றது. பாகிஸ்தானுடன் தோற்றது மட்டுமல்லாமல் இன்றைய ஆட்டத்தில் இந்தியா ஜெயித்தால் மட்டுமே இந்த தொடரினுள் இருக்க முடியும் என்ற அழுத்தத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

பாகிஸ்தானுடனான ஆட்டத்தில் இந்த அணியின் டாப் வீரர்கள் ஸ்விங் பௌலிங்கில் திணறி ஆட்டமிழந்தனர். 152 கிமீ வேகத்தில் திடீரென ஸ்விங் ஆன பந்துகளை அணி வீரர்களால் எதிர் கொள்ள முடியவில்லை. இதனாலேயே இந்திய அணியின் டாப் ஆர்டர் சரிந்தது.

இதனை குறிப்பிடும் வகையில் நியூசிலாந்து அணியின் வீரர் , பாக்கிஸ்தான் வீரர் ஷாகின் ஷாவை போல் தாங்களும் இந்தியாக்கு எதிராக பந்து வீச திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதற்க்கு பதில் அளித்த இந்திய கேப்டன் கோலி, பந்து வீசும் முறை அவர்களுடைய விருப்பம் எனவும், நாங்கள் பந்து வீச்சாளருக்கு அழுத்தத்தை கொடுப்போம் எனவும் கூறியுள்ளார்.