தமிழக அரசு நடுநிலைப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு..!!

0
207

தமிழக அரசு நடுநிலைப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் உள்ள 110 அரசு நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் இயங்கும் பல்வேறு நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக உயர்த்த பட்டியல் தயார் செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இந்த பட்டியலை முதற்கட்டமாக, அனைத்து மாவட்டத்திலும் உள்ள முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியதன் மூலம் அங்கிருக்கும் இடவசதி, கூடுதல் அடிப்படை தேவை மற்றும் சில முக்கிய காரணங்கள் குறித்து விரைவில் அறிக்கையை சமர்ப்பிக்க பள்ளிக்கல்வித்துறை மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னரே, கூடுதல் வசதிகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் சில முக்கிய ஆலோசனைகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleகடத்தப்பட்ட குழந்தையை கச்சிதமாக மீட்ட போலீசார்; பொதுமக்களிடம் குவியும் பாராட்டு! சபாஷ் காவல்துறை..!!
Next articleஇந்திய பவுலர்களின் போராட்டம் வீணாகுமா? தோல்வியின் விளிம்பில் இந்தியா !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here