கடத்தப்பட்ட குழந்தையை கச்சிதமாக மீட்ட போலீசார்; பொதுமக்களிடம் குவியும் பாராட்டு! சபாஷ் காவல்துறை..!!

0
225

கடத்தப்பட்ட குழந்தையை கச்சிதமாக மீட்ட போலீசார்; பொதுமக்களிடம் குவியும் பாராட்டு! சபாஷ் காவல்துறை..!!

சென்னை: பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று முன்தினம் தாயுடன் உறங்கியிருந்த குழந்தை மர்ம நபர்களால் கடத்தப்பட்ட செய்தி பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நான்கு குழுக்களாக பிரிந்து குழந்தை கடத்தியது பற்றி தேடுதல் வேட்டையை நடத்தினர். இந்நிலையில், சமூகத்தின் நான்காவது கண்ணாக விளங்கும் சிசிடிவி காட்சியில் ஒரு மர்ம பெண் குழந்தையை கடத்திச் சென்ற காட்சி பதிவாகியிருந்தது.

இதனையடுத்து பல்வேறு சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து குழந்தையை கடத்திச் சென்ற பகுதியை சில மணி நேரங்களில் கண்டுபிடித்தனர். குழந்தை நெசப்பாக்கம் பகுதியில் கடத்திச் சென்று ஒரு வீட்டில் வைத்திருப்பது உறுதியானவுடன், போலீசார் அதிரடியாக வீட்டில் நுழைந்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். பிறகு கடத்தப்பட்ட குழந்தையை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், குழந்தையின் பெற்றோரை அழைத்து மகிழ்ச்சியான செல்பியுடன் போலீசார் பத்திரமாக ஒப்படைத்தனர். மேலும், குழந்தை விஷயத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டது. கடத்திய கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர். குழந்தை கடத்தி 24 மணி நேரத்தில் காப்பாற்றிய போலீசாரை காவல்துறை உயர் அதிகாரிகளும், பொது மக்களும் பாராட்டி வருகின்றனர்.

Previous articleபெண் நடத்துனரின் சட்டையை கிழித்து அராஜகம்! பேருந்தில் ஏற்பட்ட கைகலப்பு சம்பவம்..!!
Next articleதமிழக அரசு நடுநிலைப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு..!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here