டிக்டாக் செயலியை விட சூப்பரான டாங்கி செயலியை வெளியிடும் கூகுள் நிறுவனம்..!!!

0
150

டிக்டாக் செயலியை விட சூப்பரான டாங்கி செயலியை வெளியிடும் கூகுள் நிறுவனம்..!!!

பேச்சு, ஓவியம், கலை, ஆடல் பாடல், உள்ளிட்ட தனித்திறமைகளை பகிர்ந்து கொள்ள உதவும் பொழுதுபோக்கு செயலிதான் டிக்டாக். தற்போது உலகம் முழுவதும் சுமார் 60 கோடி மக்களுக்கும் மேற்பட்டோர் டிக்டாக் செயலியை பயன்படுத்துகின்றனர். இதில் சில வினாடிகளில் ஆடுவது, பாடுவது, சினிமா டயலாக் பேசுவது போன்ற பொழுது போக்கு செயல்களை குறுகிய நேரத்தில் வெளியிடும் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிக்டாக்கை பலர் ஆர்வத்துடன் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு போட்டியாக இருக்கும் விதமாக கூகுள் நிறுவனம் டாங்கி என்கிற பெயரில் புதிய அப்ளிகேசனை உருவாக்கி வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. டிக்டாக் செயலியை விட இதில் புதிய விஷயங்களுடன் வடிவமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், வீடியோக்களை ஒரு நிமிட நேரத்திற்கு மேல் பயன்படுத்தும் விதமாக புதுமையான வடிவில் உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

டாங்கி (Tangi) செயலியின் சோதனை ஓட்டம் நடைபெறுவதாகவும், விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் டாங்கி செயலியின் நிறுவனர் கூறியுள்ளார். சமூக வலைதளங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி சில நல்ல தகவல்களை சேர்த்தாலும், புதிய செயலிகளை பலர் தவறான எண்ணத்தில் பயன்படுத்துவதால் சமூகத்தில் சில வன்முறை சம்பவங்களும் நடந்தேறுவதை யாராலும் மறுக்க முடியாது.

Previous article2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமைப்போம்! பிரேமலதா விஜயகாந்த் சூளுரை..!!
Next articleதிமுகவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்; ஒரிஜினல் சங்கி ஸ்டாலின் என்று டுவிட்டரில் டிரெண்டிங் ஹேஷ்டேக்!!