இங்கிலாந்துக்கு டாட்டா பாய் சொல்லிய இந்தியா! தொடர் தோல்வியால் அரையிறுதி வாய்ப்பை இழந்த நடப்பு சேம்பியன்!!
நேற்று(அக்டோபர்29) நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான உலகக் கோப்பை தொடர்பு லீக் சுற்றில் நடப்பு சேம்பியன் இங்கிலாந்து அணி 5வது தோல்வியை பெற்று அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ளது.
நடப்பு உலகக் கோப்பை தொடரின் 29வது லீக் தொடரில் நடப்பு சேம்பியன் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் நேற்று(அக்டோபர்29) விளையாடியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோஹ்லி ரன் எதுவும் எடுக்காமலும் சுப்மான் கில் 9 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.
அதன் பின்னர் ரோஹித் சர்மா மற்றும் கே.எல் ராகுல் இணை பொறுமையாக விளையாடி ரன் சேர்க்க தொடங்கியது. கே எல் ராகுல் 39 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடர்ந்து விளையாடிய ரோஹித் சர்மா சதமடித்தார்.
மறுபக்கம் ரோஹித் சர்மாவுக்கு துணையாக சூரியாக்குமார் யாதவ் அவர்கள் ரன்களை சேர்க்க தெடங்கினார். தொடர்ந்து விளையாடிய ரோஹித் 87 ரன்களிலும் சூரியக்குமார் யாதவ் 49 ரன்களிலும் ஆட்டமிழக்க அதன் பின்னர் களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய டேவிட் வில்லி மூன்று விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ், அதில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மார்க் வுட் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
எளிமையான இலக்கைக் கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜானி பேரிஸ்டோ 14 ரன்களிலும், டேவிட் மாலன் 16 ரன்களிலும் ஜோ ரூட், பென்ஸ்டோக்ஸ் இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் இங்கிலாந்து அணி 39 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் களமிறங்கிய பட்லர் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டன் மட்டும் பொறுமையாக விளையாடி 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் களமிறங்கிய மற்ற பேட்ஸ்மென்கள் அனைவரும் சிற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்கள் சேர்த்து தோல்வியை தழுவியது.
இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய முகம்மது ஷமி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனால் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு உலகக் கோப்பை தேரில் இந்தியா அணி தனது ஆறாவது வெற்றியை பதிவு செய்தது. மேலும் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும் நடப்பு சேம்பியனான இங்கிலாந்து அணி தொடர்ந்து 5வது தோல்வியை சந்தித்ததால் நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது.