சாம்பியன்ஸ் கோப்பை வாய்ப்பை இழக்கும் இங்கிலாந்து! முக்கியமான அறிவிப்பை வெளியிட்ட ஐசிசி !!

0
40
#image_title
சாம்பியன்ஸ் கோப்பை வாய்ப்பை இழக்கும் இங்கிலாந்து! முக்கியமான அறிவிப்பை வெளியிட்ட ஐசிசி
2025ம் ஆண்டு நடக்கவிருக்கும் மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை தேரில் விளையாடுவதற்கான வாய்ப்பை இழக்கும் தருவாயில் இங்கிலாந்து அணி உள்ளது.
இந்தியாவில் தற்பொழுது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, போட்டியில் நடத்தும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் என்று 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றது.
இதில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் உள்ளது. நடப்பு சேம்பியனான இங்கிலாந்து படுமோசமாக விளையாடி தற்பொழுது கடைசி இடத்தில் இருக்கின்றது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது 2025ம் ஆண்டு நடைபெறவுள்ள மினி உலகக் கோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 2025 ஆண்டில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் அணிகள் பற்றி ஐசிசி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது நடப்பாண்டு நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் 2025ம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெறும் என்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி தற்பொழுது உள்ள உலகக் கோப்பை தொடரின் புள்ளிப்பட்டியலை வைத்து பார்க்கும் பொழுது இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் வாய்ப்புகள் மிக மிக குறைவு ஆகும். ஏனெனில் இரண்டு அணிகளும் விளையாடிய 6 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டும் பெற்று புள்ளிப்பட்டியலில் வங்கதேச அணி 9வது இடத்திலும் இங்கிலாந்து அணி 10வது இடத்திலும் இருக்கின்றது.
தற்பொழுது உள்ள நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் ஆப்கானிஸ்தான் 7வது இடத்திலும் நெதர்லாந்து 8வது இடத்திலும் உள்ளன. இதனால் இந்த இரண்டு அணிகளுக்கும் 2025ம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் வாய்ப்புகள் இருக்கின்றது.
பாகிஸ்தானில் 2025ம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவுள்ள 8 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்படும். இரண்டு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.