பால் மற்றும் மதுபானங்களுக்கு வரி உயர்வு!! திடீரென்று வெளியான அறிவிப்பு!!

Photo of author

By CineDesk

பால் மற்றும் மதுபானங்களுக்கு வரி உயர்வு!! திடீரென்று வெளியான அறிவிப்பு!!

CineDesk

Tax hike on milk and liquor!! Sudden announcement!!

பால் மற்றும் மதுபானங்களுக்கு வரி உயர்வு!! திடீரென்று வெளியான அறிவிப்பு!!

கர்நாடக மாநிலத்தின் பட்ஜெட் குறித்து அம்மாநிலத்தின் முதலமைச்சர் சித்தராமையா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளார். இவர் சில நாட்களுக்கு முன்பு தான் தேர்தலில் வெற்றி பெற்றார்.

இவர் வெற்றி பெற்றதை அடுத்து கர்நாடக மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் உள்நாட்டில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மது பானங்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது கூடுதலாக கலால் வரி இருபது சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதேபோல் பீர் மீதான கூடுதல் கலால் வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இந்த வரியானது 175-லிருந்து 185 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதைப்போலேவே கர்நாடக அரசானது இந்த பட்ஜெட்டில் பாலுக்கான வரியையும் இருபது சதவிகிதமாக உயர்த்தி உள்ளது.

இவ்வாறு அடிப்படை தேவையான பாலில் வரியை அதிகரித்திருப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதை பல பேர் எதிர்த்தும் வருகின்றனர்.