இந்த மாவட்டத்தில் கட்டாயம் ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும்! மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

0
158

இந்த மாவட்டத்தில் கட்டாயம் ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும்! மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில்  கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.அதனை தொடர்ந்து அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றது.அதன் பிறகு  கடந்த 9 ஆம் தேதி நள்ளிரவு சுமார் மூன்று மணியளவில் புயலாக வலுப்பெற்றது. மாண்டஸ் என்று பெயர் பெற்ற இந்த புயல் ஆந்திர ஸ்ரீஹரிகோட்டா இடையே நள்ளிரவு கரையை கடந்தது.

இந்நிலையில் வட தமிழகத்தில் மேல்நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் ,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் அடுத்த மூன்று நாட்களுக்கு  கனமழை நீட்டிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் கனமழையின் காரணமாக திருவள்ளூர் ,செங்கல்பட்டு ,காஞ்சிபுரம்,விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பள்ளி கட்டிடங்களின் உறுதி தன்மையை அறிய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டனர்.விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அதனால் இன்று ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு சென்று கட்டிடத்தின் நிலைத்தன்மை ,வளாக தூய்மை மற்றும் கழிப்பிட வசதி குறித்து சோதனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

Previous articleவாய் துர்நாற்றமா! வீட்டில் உள்ள எளிய பொருட்களை வைத்து சரி செய்யும் வழிமுறைகள் !!
Next articleகுழந்தைகளை பாதிக்கும் புதிய   வகை வைரஸ்!! பீதியில் பெற்றோர்!!