மாணவர்களுக்கு அந்த பொருளை விற்ற வாலிபர்கள்! போலீசார்  அதிரடி நடவடிக்கை !

0
172
Teenagers who sold that product to students! Police action!
Teenagers who sold that product to students! Police action!

மாணவர்களுக்கு அந்த பொருளை விற்ற வாலிபர்கள்! போலீசார்  அதிரடி நடவடிக்கை !

சேலம் மாவட்ட  போலீசார்களுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலில் சேலம் வீராணம் பகுதியில் ஒரு சில கடைகளில் புகையிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு அதனை மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும்  அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. போலீசார் டி .பெருமாபாளையம் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினார்கள். அப்போது அதே  பகுதியில் கண்ணன் (31)  என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றனர்.

அந்த கடையை சோதனை நடத்தினார்கள். அப்போது அவர் கடையில் புகையிலை  பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து போலீசார் கண்ணனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த  மூன்றாயிரம் மதிப்பிலான புகையிலைகள் பொருட்கள் பறிமுதல் செய்தனர். அதே பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற சதீஷ்குமார் (27) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இரண்டாயிரம் மதிப்பிலான புகையிலை  பறிமுதல் செய்யப்பட்டது .இவர்கள் இருவரும் பள்ளி மாணவர்களுக்கு புகையிலை விற்றது உறுதி செய்யப்பட்டது.

Previous articleசமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!
Next articleபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு! முதல்வர் காணொளி காட்சி மூலம் திறப்பு!