குஷ்புவுக்கு கணவராக இருப்பதற்கே சுந்தர்.சி-க்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்-தமிழிசை சவுந்தரராஜன் !

Photo of author

By Savitha

வெளியுலகில் பிரபலமாக உள்ள மனைவிக்கு கணவராக இருப்பதற்காகவே அவருக்கு கண்டிப்பாக டாக்டர் பட்டம் வழங்கலாம் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலகலப்பாக பேசியுள்ளார்.

இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் பிரபலமாக விளங்கும் சுந்தர்.சி படத்திற்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவரது படங்கள் பெரும்பாலும் பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும், பட்டமளிப்பு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இவரை பற்றி தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நகைச்சுவையாக பேசியது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. பூந்தமல்லி பகுதியிலுள்ள வேலப்பன்சாவடி என்கிற பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் பயின்ற கிட்டத்தட்ட 2241 மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.குஷ்புவிற்கு கணவராக இருப்பதற்காகவே இயக்குநர் சுந்தர் சிக்கு டாக்டர் பட்டம்  கொடுக்கலாம் - ஆளுநர் தமிழிசை கலகலப்பு

அந்த கலோரியில் மருத்துவம், காலை மற்றும் அறிவியல் போன்ற பல்வேறு பாடப்பிரிவுகளில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், இயக்குனர் சுந்தர்.சி, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், இயக்குனர் மணிரத்தினம், நடிகர் பாண்டியராஜன் மற்றும் நடிகை குஷ்பூ உள்ளிட்ட பல முக்கியமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்த தெலுங்கானா ஆளுநர் சுந்தர்.சி குறித்து நகைச்சுவையாக பேசியுள்ளார். அதாவது நடிகை குஷ்புவுக்கு கணவராக இருப்பதற்காகவே சுந்தர்.சி-க்கு டாக்டர் பட்டத்தை கொடுக்கலாம், வெளியுலகில் பிரபலமாக உள்ள மனைவிக்கு கணவராக இருப்பதற்காகவே அவருக்கு கண்டிப்பாக டாக்டர் பட்டம் வழங்கலாம் என்று நகைச்சுவையாக பேசியிருக்கிறார்.