கோவில் பூசாரி 15 வயது சிறுமியை பலாத்காரம்! சாகும் வரை சிறை நீதிமன்றம் உத்தரவு!

Photo of author

By Parthipan K

கோவில் பூசாரி 15 வயது சிறுமியை பலாத்காரம்! சாகும் வரை சிறை நீதிமன்றம் உத்தரவு!

Parthipan K

Temple priest rapes 15-year-old girl Prison court orders death sentence

கோவில் பூசாரி 15 வயது சிறுமியை பலாத்காரம்! சாகும் வரை சிறை நீதிமன்றம் உத்தரவு!

ராமநாதபுரம் தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் முக்காணி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் மாசாணமுத்து.அவரது வயது (54) அவர் அப்பகுதியில் உள்ள சுடலைமாடன் என்னும் கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த (35) வயது பெண் அந்த கோவிலுக்கு தரிசனம் பெறுவதற்காக வந்திருக்கிறார். பூசாரி மாசானமுத்துவிடம்அந்தப் பெண் தனது குடும்ப கஷ்டங்கள் மற்றும் உடல் நிலை பாதிப்புகள் நீங்க வேண்டும் எனவும் கூறி தட்சணை பெற்றிருக்கிறார்.

அதற்கு பூசாரி மாசாணமுத்து ராமேஸ்வரம் சென்று பரிகாரம் செய்து வந்தால் உங்களுடைய குடும்ப கஷ்டங்கள் மற்றும் உடல் நல பிரச்சனைகள் உள்ளிட்ட பாதிப்புகள் நீங்கும் என கூறியிருக்கிறார். இதையடுத்து அந்தப் பெண் தனது (15) வயது மகளையும் அழைத்துக்கொண்டு பூசாரி மாசாணமுத்துடன்  ராமேஸ்வரம் சென்றிருக்கிறார். பரிகாரம் செய்வதற்காக விடுதியில் தங்கியிருந்த போது பூசாரி மாசாணமுத்து அந்தப் பெண்ணின் (15) வயது சிறுமியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

இது தொடர்பாக ராமேஸ்வரம் மகளிர் போலீசாரிடம் சிறுமியின் தாய் புகார் அளித்திருக்கிறார். இதையடுத்த மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து பூசாரி மாசாண முத்துவை கைதுச் செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது .வழக்கை விசாரித்த நீதிபதி சுபத்ரா, கோவில் பூசாரி மாசாணமுத்து இறக்கும்வரை சிறையில் அடைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.