உங்களால மட்டும் தான் போக முடியுமா? முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் டெல்லி பயணம்!

0
83

தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் மேகதாது அணை விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக டெல்லி செல்ல இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட திட்டமிட்டு வருகிறது. இதற்கு அந்த மாநில அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி உடனடியாக அடிக்கல் நாட்ட வேண்டும் என்று ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கு கோரிக்கை வைத்திருக்கிறது.

தமிழகத்தின் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வரும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டப்படும் ஆனால் தமிழ்நாட்டில் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாவார்கள். இதனால் தமிழக அரசு மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு மிகக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.அதோடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் கூடி மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் இன்று மத்திய அரசிடம் நேரில் சமர்ப்பிக்க இருக்கிறார்கள்.

இதற்கிடையே திடீரென இன்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருக்கிறார் என்று தகவல் வெளியானது இது தொடர்பாக அவர் கொடுத்திருக்கின்ற பேட்டியில் நான் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க இருக்கின்றேன் மேகதாது உட்பட பல நீர்ப்பாசன திட்டங்களுக்கு உதவி புரியுமாறு பிரதமரிடம் கோரிக்கை வைக்க இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் எதிர்வரும் 18ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மேகதாது அணை கட்டுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து பேசுவதற்காக டெல்லிக்கு பயணமாக இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.