10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா செல்லாதா? மத்திய அரசு அதிரடி பதில்!

0
89

ரிசர்வ் வாங்கி வெளியிட்ட 10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா/ செல்லாதா? என்று பொதுமக்களுக்கு விளக்கமளித்து வருகின்றது. 10 ரூபாய் நாணயங்களை வியாபாரிகள் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட வாங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு பல காலமாகவே இருந்து வருகிறது.

10 ரூபாய் நாணயங்களை ரிசர்வ் வாங்கி தடை செய்து விட்டது என்ற வதந்தியும் 10 ரூபாய் நாணயங்களை போல போலி நாணயங்கள் சந்தையில் உலா வருகின்றன என்ற செய்தியும் தான் பொது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இது 10 ரூபாய் நாணயங்களை பயன்படுத்துவதற்கு இடையூறாக அமைந்திருந்தது.

பொது மக்களிடையே நிலவிவரும் இந்த குழப்பங்களை தொடர்ந்து பொதுமக்களுக்கு 10 ரூபாய் நாணயங்கள் மீதான பயத்தை போக்கும் விதத்தில் 10 ரூபாய் நாணயங்களை முழுமையாக செல்லத்தக்கது என்று ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.

ரிசர்வ் வங்கி அவ்வாறு தெரிவித்திருந்தும் கூட பொது மக்களிடையே பெரும் குழப்பமிருந்து வருகிறது. ஏனெனில் 10 ரூபாய் நாணயங்களை டீக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளிலும் வாங்குவதற்கு மறுப்பதே இதன் காரணமாக கருதப்படுகிறது.

இதன் அடிப்படையில், 10 ரூபாய் நாணயம் செல்லுமா/ அல்லது செல்லாதா? என்று ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பல்வேறு புகார்கள் ரிசர்வ் வங்கியை நோக்கி வந்தவண்ணமிருக்கிறது.

இன்னும் 10 ரூபாய் நாணயத்தை பல இடங்களில் வாங்க மாட்டேன் என தெரிவிக்கிறார்கள் என புகார் எழுந்தது. 14 வகை நாணயங்களும் ரிசர்வ் வங்கி வெளியிட்ட நாணயங்கள் தான் போலியானவை கிடையாது என்று தெரிவித்திருந்தது.

இந்த சூழ்நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றிய மத்திய இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி 10 ரூபாய் நாணயத்தை எந்தவித தயக்கமும் மற்றும் பயமும் இல்லாமல் உபயோகப்படுத்தலாம் என்று கூறியிருக்கிறார்.

அதோடு நாட்டில் சட்டபூர்வமாக நடைபெறும் டெண்டர்கள் பரிவர்த்தனைக்கு பத்து ரூபாய் நாணயங்களை பயன்படுத்தலாம் என்று விளக்கம் அளித்திருக்கிறார்.