அடச்சே இதெல்லாம் ஒரு பிழைப்பா? திமுகவை விளாசும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி!

0
66

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை மிகவும் பரபரப்பாக தாக்கல் செய்து வந்தார்கள். ஒருவழியாக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவுற்றது.

ஆனால் வேட்புமனுத்தாக்கல் முடிவுற்ற பிறகு வேட்புமனுக்களை திரும்பப் பெறும் அவகாசம் சென்ற 6ம் தேதி வரையில் வழங்கப்பட்டது. இருந்தாலும் அந்த சமயத்தில் அதிமுக, திமுக என்று வேட்பாளர்களை மாற்றி, மாற்றி, கடத்தி விட்டார்களென்று சில வதந்திகளை பரப்ப தொடங்கினார்கள்.

இந்த பரபரப்புக்கிடையே அதிமுக, திமுக, உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பரபரப்பான பிரசாரத்தில் இறங்கியிருந்தார்கள்.

இதனடிப்படையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை பெருநகர மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.அப்போது எழும்பூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றியதாவது,

திமுக ஆட்சிக்கு வந்து எதையுமே சரியாக செய்யவில்லை, ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் தான் ஆகிறது அதற்குள் கொடுத்த வாக்குறுதி பாதியை நிறைவேற்றி விட்டோம் என்று மார்தட்டிக் கொள்கிறது என குற்றம்சாட்டினார்.

மேலும் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்றியதாக தெரிவிக்கிறார்கள், ஆனாலும் இது வரையில் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த வாக்குறுதிகளை ஒன்றைக்கூட முழுமையாக நிறைவேற்றவில்லை என குற்றம் சுமத்தினார் எடப்பாடி பழனிச்சாமி.

ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் அதற்கான சூட்சுமம் என்னவென்று ஸ்டாலினுக்கு தெரியும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் அவர்களின் சூட்சமம் தற்போது என்னவாயிற்று என்று தெரியவில்லை என்று கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

அதோடு திமுக தெரிவித்ததை நம்பி ஏராளமான மாணவ, மாணவிகள், உயிரிழந்தது தான் மிச்சம் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், முதியோருக்கு 1000 ரூபாய் உதவித்தொகை என்று பல வாக்குறுதிகளை வழங்கினார்கள். ஆனால் இதெல்லாம் என்னவாயிற்று என்று கேட்டால் நிதியில்லை என்று தெரிவிக்கிறார்கள்.

நிதி இல்லையென்று தெரிந்தும் கூட இவ்வாறான வாக்குறுதிகளை எதற்காக வழங்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

அதோடு அதிமுக நிறைவேற்றி வந்த பல திட்டங்களை திமுக அரசு முடக்கியிருக்கிறது. அதில் முக்கியமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் அந்த திட்டத்தின் மூலமாக 2 வருட காலத்திற்கு முன்னர் 1000 ரூபாய் அனைத்து குடும்பத்திற்கும் வழங்கி வந்தோம்.

சென்றவருடம் 2500 வழங்கினோம். ஆனால் தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு என்ற பெயரில் 500 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருக்கிறது என்று குற்றம் சுமத்தினார் எடப்பாடி பழனிச்சாமி.

அதிமுக ஆட்சிக்காலத்தில் நோய்த்தொற்று, வறட்சி, வெள்ளம், உள்ளிட்ட பல பிரச்சனைகள் இருந்தன. ஆனாலும் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி கண்ட அரசுதான் அதிமுக அரசு நிச்சயமாக அதிமுக ஆட்சி மீண்டும் அமையும்.

இதன் ஒரு பகுதியாக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்யுங்கள் நம்முடைய வேட்ப்பாளரே சென்னை மேயராக இருக்கவேண்டும். உள்ளாட்சித் துறையின் மூலமாக மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர இயலும் என்று தெரிவித்திருக்கிறார்.