பகவதி அம்மன் கோவிலில் திடீரென்று வெளிவந்த தேவதை! மக்கள் அதிர்ச்சி!

0
89

அனைவரும் கேரள என்றாலே சபரிமலை ஐயப்பன் தான் ஞாபகம் வருவார். அதேபோல் மண்டைக்காடு பகுதியில் இருக்கும் பகவதி அம்மன் அனைவருக்கும் நினைவுக்கு வருவார். இந்நிலையில் மாபெரும் அதிசயம் ஒன்று அங்கு நடைபெற்றுள்ளது.

மண்டைக்காடு பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் துணை தேவதை மண்ணில் புதைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின் அதை வெளியே எடுக்கப் பட்டது.

 

சமீபத்தில் மண்டைக்காடு பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இது எதற்காக ஏற்பட்டது என்று அனைத்து மக்களும் சந்தேகித்த நிலையில் தேவ பிரசன்னம் நடத்த முடிவு செய்தனர்.

 

வயநாடு ஜோதிடர் ஸ்ரீநாத், ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் முன்னாள் மேல்சாந்தி விஷ்ணுநம்பூதிரி ஆகியோர் தேவ பிரசன்னம் நடத்தினர். பிரசன்னம் என்பது ஜோதிடத்தில் ஓர் அங்கமாகும். ஒரு குறிப்பிட்ட விஷயம் சம்பந்தமாக கேட்கப்படும் கேள்விக்கு, ஜனன கால ஜாதகத்தை கருத்தில் கொள்ளாமல், வாடிக்கையாளர் கேள்வி கேட்ட நேரத்தின்போது வான்மண்டலத்தில் உண்டான கிரக நிலைகளை கொண்டு பதில் கூறுவதே ‘பிரசன்னம்’ ஆகும்.

 

இப்படி தேவ பிரசன்னம் செய்து அம்மன் என்ன சொல்கிறார் என்று கேட்டு வந்தனர். அப்பொழுது ஏற்பட்ட தீ விபத்திற்கு அம்மன் தான் காரணம். செய்யும் பூஜைகளில் குறைபாடுகள் உள்ளன என்று தெரிவித்தார். கோவிலில் உள்ள தந்திரிகளுக்கு கொடுக்கப்படும் மரியாதை உரிய மரியாதை கொடுக்க வேண்டும். சன்னிதியில் மேற்கூரை அகற்றப்பட்டு உள்ளது. அதனை சரிசெய்ய வேண்டும் என அம்மன் தெரிவித்து உள்ளார்.

 

அதேபோல் அம்மனுக்கு மூன்று வேளை பிராமண பூஜை நடத்தப் படவேண்டும். கொடிமரத்தை சுற்றி பலிக்கல் அமைக்கப்பட வேண்டும். கூறைகளை சரி செய்யும் பொழுது பலா மரக் கட்டைகளை கொண்டு தான் அமர்த்தவேண்டும். மாதம் ஒரு நாள் தேவ போர்டு சார்பில் அம்மனை பவனி செய்ய வேண்டும் தங்கத் தேரில் என தெரிவித்துள்ளனர்.

 

அந்த கோவிலில் ஏற்கனவே அம்மனுடன் ஒரு யக்ஷி-துணை தேவதை இருப்பதாக அம்மன் தெரிவித்துள்ளார். தேவ பிரசன்னத்தில் அது தெரிவதாக ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், கோவில் நிர்வாகிகள் அதுபோல இந்த இல்லையே என்று மறுத்துள்ளனர். உடனே மறுபடியும் தேவப்பிரசன்னம் பார்த்தபோது அது எங்கே இருக்கிறது என்று தெரிந்தது. கோவிலுக்குள் ஒரு பகுதியில் மண்ணுக்குள் தோண்டியபோது அங்கு சிலை இருப்பது கண்டறியப்பட்டது. இதை கண்ட அனைவரும் அதிர்ச்சியுற்றனர்.

 

பல ஆயிரக் கணக்காக ஆண்டுகளாக பூமியில் மூழ்கி கிடந்த தேவதை சிலை கண்டுபிடிக்கப்பட்டது மக்களுக்கு மாபெரும் அதிர்ச்சி மற்றும் நெகிழ்ச்சி சம்பவம் ஆக இருந்துள்ளது.

author avatar
Kowsalya