இத்தாலியில் ஏற்பட்ட தீவிபத்தால் பதற்றம்

Photo of author

By Parthipan K

இத்தாலியில் ஏற்பட்ட தீவிபத்தால் பதற்றம்

Parthipan K

அன்கோனா நகரத் துறைமுகம் இத்தாலியில் உள்ளது அங்கு பெரிய அளவில் தீ ஏற்பட்டுள்ளது.  துறைமுகத்தில் இருந்த சரக்குக் கிடங்குகளும், வாகனங்களும் அழிந்தன. உயிர்ச்சேதம் குறித்த தகவல் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் கூறினர். நள்ளிரவில் வெடிப்பு நேர்ந்தது. 16 தீயணைப்புக் குழுக்கள் நெருப்பை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. வெடிப்பு நேர்ந்ததற்கான காரணம் தெரியவில்லை. அன்கோனா வட்டாரக் கிடங்குகளில்,எளிதில் தீப்பற்றும் திரவம் சேமித்து வைக்கப்படுவது வழக்கம். வெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.