துணிவு -வாரிசு படங்களின் வசூல் பாக்ஸ் ஆபீஸில் சாதனை!  நிகழ்ந்த தரமான சம்பவம்! 

0
308

துணிவு -வாரிசு படங்களின் வசூல் பாக்ஸ் ஆபீஸில் சாதனை!  நிகழ்ந்த தரமான சம்பவம்! 

பொங்கல் இனிப்பாக இந்த ஆண்டு அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் நேற்று வெளியாகி உள்ளது. தல ரசிகர்களுக்கும் தளபதி ரசிகர்களுக்கும் இந்த வருட ஆரம்பமே அதிரடியால் அமர்க்களமாக தொடங்கியுள்ளது. இரண்டு ரசிகர்களுடைய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானதால் செம மகிழ்ச்சியில் உள்ளனர். அதற்கு ஏற்றார் போல் இரண்டு நடிகர்களின் படங்களும் சிறந்த கதை அம்சத்துடன் தரமான கதைக்களத்துடன் இருப்பதால் கலவையான நேர்மறை விமர்சனங்களை பெற்றுள்ளன.

தமிழ்நாட்டில் நடிகர் அஜித்தின் துணிவு படம் 25 கோடிக்கு மேல் வசூல் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. அதேபோல் கேரளாவில் நடிகர் விஜயின் வாரிசு படம் வசூலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் இரண்டு படங்களும் முதல் நாளில் 20 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளன.  இரண்டு படங்களுக்குமே நல்ல விமர்சனங்கள் வருவதால் படத்திற்கான புக்கிங் ஹவுஸ் ஃபுல்லாக இருக்கின்றன. நேற்று பல பிரபலங்களும் இந்த இரண்டு நடிகர்களின் படங்களையும் பார்த்துள்ளனர்.

இரண்டு படங்களையும் வசூல் விவரம்:  ( கோடிகளில்)

துணிவு                      –           வாரிசு

கர்நாடகா –  4.7                               5.6

கேரளா     – 1.5                                 4.3

ஆந்திரா/

தெலுங்கானா – 2.25                       –

அமெரிக்கா – 400K$                   325K$

சிங்கப்பூர்.   – 244K$                    158K$

Gulf         –             5                             4.8

UK            –            1                             2+

மலேஷியா –

1மில்லியன் RM   –   RM886,776.00

இரண்டு படங்களுமே இன்னும் அதிக வசூல் சாதனை படைக்கும் என தெரிகிறது.

 

 

Previous articleபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்களை அதிரடியாக உயர்த்திய தபால் அலுவலகம் !
Next articleஅரிசியில் இனி இதை சேர்க்கக்கூடாது! உணவு பாதுகாப்பு தர நிர்ணயம் அதிரடி உத்தரவு!