பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஊசி மூலம் ஆண்மை நீக்கம்… தாய்லாந்தில் புதிய சட்டம்!

0
186

பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஊசி மூலம் ஆண்மை நீக்கம்… தாய்லாந்தில் புதிய சட்டம்!

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்வதற்கான மசோதாவுக்கு தாய்லாந்து செனட் உறுப்பினர்கள் அனுமதி அளித்துள்ளனர்.

உலகம் முழுவதும் பல நாடுகளில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன. மரண தண்டனை விதிக்கப்படும் நாடுகளில் கூட இந்த குற்றங்கள் நடந்துகொண்டுதான் உள்ளன. இந்நிலையில் பாலியல் குற்றங்களுக்கு புதுவிதமான தண்டனை ஒன்றை தாய்லாந்து அமல்படுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்தில் பாலியல் குற்றங்களைச் சமாளிப்பதற்கான வழிமுறையாக கெமிக்கல் ஊசிகளின் மூலம் ஆண்மைநீக்கம் செய்யும் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு தாய்லாந்து நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது.

இது சம்மந்தமான மசோதாவை மார்ச் மாதம் கீழ்சபை நிறைவேற்றிய நிலையில் கடந்த திங்கள்கிழமை 145 செனட்டர்களால் அங்கீகரிக்கப்பட்டது, இருவர் வாக்களிக்கவில்லை. இந்த சட்ட மசோதா உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

2013 மற்றும் 2020 க்கு இடையில் தாய்லாந்து சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 16,413 பாலியல் குற்றவாளிகளில், 4,848 பேர் மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக தரவுகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Previous articleதாமதம் ஆகும் சூர்யாவின் வணங்கான்… போதும்பா என மூட்டையைக் கட்டி கிளம்பிய ஒளிப்பதிவாளர்
Next articleதளபதி 67 படத்திற்கு இப்படி ஒரு தலைப்பா? ரசிகர்கள் ஆர்வம்!