தாமதம் ஆகும் சூர்யாவின் வணங்கான்… போதும்பா என மூட்டையைக் கட்டி கிளம்பிய ஒளிப்பதிவாளர்

0
259

தாமதம் ஆகும் சூர்யாவின் வணங்கான்… போதும்பா என மூட்டையைக் கட்டி கிளம்பிய ஒளிப்பதிவாளர்

சூர்யா நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கும் புதிய படம் ‘வணங்கான்’ சமீபத்தில் டைட்டில் அறிவிக்கப்பட்டது.

சூரரைப் போற்று, ஜெய்பீம் என அடுத்தடுத்து ஓடிடிகளில் சூர்யா படங்கள் வெற்றி பெற்றன. ஆனால் சமீபத்தில் திரையரங்குகளில் அவர் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில், ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கவுள்ள அடுத்த படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு வேடங்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதில் ஒரு கதாபாத்திரத்தில் மாற்றுத்திறனாளியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்துக்கு வணங்கான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது.

படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நடந்தபோது கன்னியாகுமரியில் இயக்குனர் பாலாவுக்கும், நடிகர் சூர்யாவுக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக தகவல்கள் வெளியாகின. அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இதனால் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த படம் மீண்டும் எப்போது தொடங்கும் என்பது தெரியாத நிலையில் இதனால் பல பட வாய்ப்புகளை இழந்துள்ள ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு பதிலாக தற்போது ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.தாமதம் ஆகும் சூர்யாவின் வணங்கான்… போதும்பா என மூட்டையைக் கட்டி கிளம்பிய ஒளிப்பதிவாளர்

Previous articleபள்ளிக்குச் சென்ற பிளஸ் 1 மாணவன் பரிதாபமாக பலி ! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!
Next articleபாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஊசி மூலம் ஆண்மை நீக்கம்… தாய்லாந்தில் புதிய சட்டம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here