தளபதி விஜய்யின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு ! ரசிகர்கள் உற்சாகம்!

Photo of author

By Parthipan K

தளபதி விஜய்யின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு ! ரசிகர்கள் உற்சாகம்!

Parthipan K

Updated on:

தமிழின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தமிழகத்தில் மாபெரும் ரசிகர் கூட்டத்தை அமைத்து மதிப்பிற்குரிய வகையில் வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவருக்கு என்று உயிரை கொடுக்கும் அளவிற்கு ரசிகர்கள் உள்ளனர். பொது நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் பொழுது மிகவும் அமைதியான தோற்றத்தை வெளிப்படுத்துபவர் நடிகர் விஜய்.

கொரோனாவின் காரணமாக சினிமா துறை மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. இவர் தற்போது நடித்து வெளியாகவுள்ள மாஸ்டர் திரைப்படம், இணையத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.

ஆனால் மாஸ்டர் திரைப்படம் வரும் 2021 பொங்கலில் வெளியாகலாம் என ரசிகர்களால் கருதப்படுகிறது. எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது எனலாம். இப்படத்தில் வரவுள்ள பாடல்களும் மிகப் பெரிய ஹிட்டானது. இப்படத்தில் தளபதி விஜய் அவர்கள் நடிகர் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிக்கிறார் இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இடையில் தளபதி விஜய் அவர்கள் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 65வது படத்தில் நடிக்க உள்ளார். அதோடு மட்டுமல்லாமல் தனது 65வது இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதுகுறித்து இசையமைப்பாளர் ஜி.வி. பிர0காஷ் ஒரு பதிவை போட்டுள்ளார்.” தளபதி விஜய்யும் , இயக்குனர் வெற்றிமாறனும் பல நாட்களாக இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் இருவருக்குமே அதற்கான சரியான நேரம் அமையாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இவர்கள் இருவரும் அடுத்த ஆண்டு அல்லது அதற்கு அடுத்த ஆண்டு ஒன்றாக பணியாற்றுவர். உறுதியாக நடக்கும் என்று ஜி.வி.பிரகாஷ் பதிவிட்டுள்ளார்.

எனவே இதனை பார்த்த ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். கொரோனாவால் தற்பொழுது படங்களை பார்க்க முடியாமல் தவிக்கும் ரசிகர்களுக்கு இது ஒரு புத்துணர்ச்சியை ஊட்டியுள்ளது.