கேரள மாநிலத்தில், கொல்லம் மாவட்டம் கருநகப்பள்ளியைச் சேர்ந்தவர் பூக்கடை உரிமையாளர் சுனிலின் மகள் கவுரி. இவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் கொண்டவர். வன விலங்குகள் மற்றும் மக்களின் வாழ்வியலையும் ஓவியமாக வரைய தொடங்கி பின் பிரதமர் மோடி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் உட்பட பல பிரபலங்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் விதமாக வரைந்து அசத்துகிறார்.
இந்த நிலையில் பூக்கடையில் இவரது மலர்களை விட அவரது மகள் வரைந்த ஓவியங்களே அலங்கரித்துள்ளன. இருந்தாலும் பல பிரபலங்களை ஓவியங்களாக தீட்டினாலும் அவருக்கு பிடித்தமான நடிகர் தளபதி விஜயின் பல்வேறு படங்களை வரைவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார். மேலும் ஓவியக் கலையை கற்றுக் கொண்ட சிறுமி, விஜய் உயிரோட்டமுள்ள ஓவியங்கள் வரைவதற்கு விஜய் மீதான பிரியமே காரணமாக அமைந்துள்ளது.
விஜய்யின் திரைப்படம் ஒன்றைக்கூட தவறாமல் பார்த்த இவர் நடன காட்சி மற்றும் சண்டைக் காட்சிகளை ஓவியமாக வரைய ஊக்கம் அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் அனைத்து கேரள விஜய் ரசிகர்கள் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான ஓவியப்போட்டியில் இவர் வரைந்த விஜயின் படம் முதல் பரிசை தட்டிச் சென்றது.
யூகேஜி முதல் ஓவியக் கலையில் ஆர்வம் கொண்ட சிறுமி தனக்கு முதல் பரிசைப் பெற்றுக் கொண்ட விஜயன் ஓவியத்தை அவரிடமே நேரில் சென்று வழங்க வேண்டும் என்று ஆசையுடன் தெரிவித்திருக்கின்றார். மேலும் அவர் யூகேஜி முதல் நான் ஓவியம் வரையத் தொடங்கினேன்.
மூன்றாவது, நான்காவது படிக்கும்போதே மனிதர்களின் முகத்தை வரை தொடங்கினேன் என்றும், அரசியல்வாதிகள், விலங்குகள் என அனைத்தையும் வரையத் தொடங்கினேன் என்று கூறினார்.