தளபதி68 திரைப்படத்தின் பூஜை வீடியோ வெளியானது!!! யாரெல்லாம் நடிக்கிறாங்க பாருங்க!!!

Photo of author

By Sakthi

தளபதி68 திரைப்படத்தின் பூஜை வீடியோ வெளியானது!!! யாரெல்லாம் நடிக்கிறாங்க பாருங்க!!!

Sakthi

தளபதி68 திரைப்படத்தின் பூஜை வீடியோ வெளியானது!!! யாரெல்லாம் நடிக்கிறாங்க பாருங்க!!!

நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கவியுக்கும் தளபதி 68 திரைப்படத்தின் பூஜை வீடியோ இன்று(அக்டோபர்24) மதியம் 12.05 மணிக்கு வெளியானது. அந்த பூஜை வீடியோவில் திரைப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் பற்றிய விவரங்களையும் படக்குழு கூறியுள்ளது.

லியோ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் அடுத்ததாக அவருடைய 68வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். விஜய் நடிக்கும் 68வது திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு அவர்கள் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா தளபதி68 திரைப்படத்திற்கு இசையமைக்கின்றார். மேலும் ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன்மென்ட் நிறுவனம் தளபதி68 திரைப்படத்தை தயாரிக்கின்றது.

இந்நிலையில் நேற்று(அக்டோபர்23) மாலை பூஜை வீடியோ பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. அதில் அக்டோபர் 24ம் தேதி அதாவது இன்று மதியம் 12.05 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்தது. அதன்படி இன்று(அக்டோபர்24) மதியம் 12.05 மணிக்கு சரியான நேரத்திற்கு பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டது.

இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் தளபதி 68 திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், வேலை செய்யவுள்ள டெக்னீசியன்ஸ் ஆகியோர் பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி நடிகர்கள் பிரசாந்த், மைக் மோகன், ஜெயராம், பிரபுதேவா, யோகி பாபு, விடிவி கணேஷ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், வைபவ், அஜய் ராஜ், அஜ்மல் அமீர் ஆகியோரும் நடிகைகள் லைலா, சினேகா, மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தளபதி 68 திரைப்படத்திற்கு திலீப் சுப்புராயன் சண்டைக் காட்சிகளையும், சித்தார்தா நுணி அவர்கள் சினிமோட்டோகிராபி பணிகளையும், ராஜீவன் அவர்கள் புரொடக்சன் டிசைன் பணிகளையும், வெங்கட் ராஜென் அவர்கள் எடிட்டிங் பணிகளையும் மேற்கொள்ள இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.