5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு “ப்ளூ கலர் ஆதார் கார்டு”? எவ்வாறு விண்ணப்பம் செய்ய வேண்டும்!! இதில் இவ்வளவு இருக்கா?

0
36
#image_title

5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு “ப்ளூ கலர் ஆதார் கார்டு”? எவ்வாறு விண்ணப்பம் செய்ய வேண்டும்!! இதில் இவ்வளவு இருக்கா?

இந்திய குடிமகன் என்பதற்கு அடையாளமாக இருப்பது ஆதார் கார்டு தான். இந்த ஆதார் அரசு நலத் திட்டங்களை எளிதில் பெற சாமானிய மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. வங்கி கணக்கு ஓபன் செய்ய, அரசு நலத் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கு, ரேஷன் கார்டு இணைப்பு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு என்று அனைத்து இடங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது.

இவை 12 இலக்க தனித்துவ அடையாள எண்ணைக் கொண்டிருக்கிறது. அதுபோல் புகைப்படம், பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்டவைகளுடன் குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவை பயோமெட்ரிக் முறையில் தனி நபர் ஒருவரின் தகவலை புகைப்படத்துடன் சேமிக்கிறது.

தற்பொழுது வங்கி பரிவர்த்தனை முதல் ஷாப்பிங் மால் வரை அனைத்து இடங்களிலும் ஆதார் கார்டு பயன்பாடு அதிகரித்து விட்டது.

ஒருவர் இந்த ஆதார் கார்டு பெற வேண்டும் என்றால் இதற்கு விண்ணப்பம் செய்யும்பொழுது சில ஆவண நகலை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆதார் கார்டு பெற ஆவணங்கள் ஏதும் இருக்காது என்பதினால் அவர்களுக்கு என்று பிரத்யேகமான வடிவமைக்கப்பட்ட ஒன்று தான் நீல நிற ஆதார் கார்டு.

இந்த வகை ஆதார் கார்டை மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்த நீல ஆதார் கார்டு பெற குழந்தைகளின் பயோமெட்ரிக் தரவுகளை பெற்றோர் வழங்க வேண்டியா அவசியம் இல்லை.

அப்போ எந்த ஆவண நகலை கொடுத்து குழந்தைகளுக்கான நீல நிற ஆதார் கார்டை பெறுவது என்ற கேள்வி பெற்றோர் மத்தியில் எழும். குழந்தையின் பெற்றோர் ஆதார் நகல் மற்றும் மக்கள் தொகை தரவு உள்ளிட்டவைகளை ஆதார் மையத்தில் வழங்கி சில நாட்களில் நீல நிற ஆதார் கார்டை பெற்றுக் கொள்ளலாம்.

ப்ளூ கலர் ஆதார் கார்டு பெற விண்ணப்பம் செய்வது எவ்வாறு?

1)ஆதார் ஆணையத்தின் uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுக வேண்டும்.

2)அதில் ப்ளூ கலர் ஆதார் கார்டு பெறுவதற்கான விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டு இருக்கும். அதை முறையாக நிரப்பி பதிவு செய்ய வேண்டும்.

3)அடுத்து தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு சென்று குழந்தைகளின் பெற்றோர் தங்களது ஆதார் கார்டு மற்றும் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் உள்ளிட்டவைகளின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். அடுத்து நீங்கள் பதிவு செய்த தொலைபேசி எண்ணிற்கு மெசேஜ் வரும். பின்னர் ப்ளூ கலர் ஆதார் அட்டை பெறுவதற்கான ஒப்புகை சீட்டு ஒன்று வழங்குவார்கள். அதனை மறக்காமல் வாங்கிக் கொள்ள வேண்டும்.

4)பதிவு செய்த அடுத்த 60 நாளில் உங்கள் குழந்தையின் பெயரில் ப்ளூ கலர் ஆதார் கார்டு வந்து விடும். இந்த ஆதார் கார்டு 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே செல்லும். குழந்தையின் வயது ஐந்தை தாண்டி விட்டால் கை ரேகை பதிவு, கண் கருவிழி, அவர்களின் புகைப்படம் உள்ளிட்டவைகளை ஆதார் கார்டில் அப்டேட் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.