திமுகவின் வேட்பாளர் செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த ஸ்டாலின்!

0
117

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அதே போல எல்லா அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு கூட்டணி பேச்சுவார்த்தை பயணத்தை முடித்துக்கொண்டு வேட்பாளர்களைத் தேர்வு செய்து தற்சமயம் தேடும் உணவையும் முடித்து விட்டு பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு தயாராகி இருக்கிறார்கள்.அந்த வகையில், திமுக சார்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொகுதி பங்கீடு ஆரம்பத்தில் சற்று சுணக்கம் ஏற்பட்டால் தற்சமயம் அங்கே நிலவரங்கள் அனைத்தும் சரி செய்யப்பட்டு அனைத்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.

அந்த விதத்தில், அதிமுகவில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியில் மறுபடியும் போட்டியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் எதிர்கட்சியான திமுக சார்பாக போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுகவில் இருந்து பிரிந்து திமுகவில் இணைந்த தங்கதமிழ்செல்வன் போட்டியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. துணை முதலமைச்சராக இருக்கக்கூடிய ஓ பன்னீர்செல்வம் கடந்த 2011-ம் ஆண்டு மற்றும் 2016ஆம் ஆண்டு ஆகிய சட்டசபை தேர்தல்களில் போடிநாயக்கனூர் தொகுதியில் அபார வெற்றி பெற்றிருக்கிறார்.

அதோடு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இதுவரையில் தோல்வியையே சந்திக்காத ஒரு தலைவராக இருக்கின்றார் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் சுமார் 15 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுகவினரை வெற்றி பெற்றார் துணைமுதல்வர் ஓ பன்னீர்செல்வம். இந்த நிலையில் அந்தப் பகுதியில் துணை முதல்வரை தோற்கடித்து தான் வெற்றி பெற வேண்டும் என்ற காரணத்திற்காக தங்கத்தமிழ்செல்வன் மிகத் தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்காக திமுகவில் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நடை பயணமாகவே வந்து சேர்ந்தார். அந்த சமயத்தில் அங்கே இருந்த பொதுமக்களிடம் பழக்க தோஷத்தில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று சொல்லும்விதமாக இரட்டை விரலை காட்டியபடி வந்தார்.

இதனை கண்ட திமுகவின் தொண்டர்கள் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். அதோடு இதற்கு முன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அடுத்த முதலமைச்சர் எடப்பாடியார் என தெரிவித்து விட்டு அதன்பிறகு சுதாரித்துக்கொண்ட தங்க தமிழ்ச்செல்வன் அடுத்த முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் என்று தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleவாடிக்கையாளர்களே உஷார்: இனி பாஸ்புக், செக் புக் செல்லாது… என்றிலிருந்து தெரியுமா?
Next articleமுதல்வரால் கதறும் எதிர்க்கட்சி!