வாடிக்கையாளர்களே உஷார்: இனி பாஸ்புக், செக் புக் செல்லாது… என்றிலிருந்து தெரியுமா?

0
87
Bank
Bank

கடும் நிதி நெருக்கடி காரணமாக பேங்க் ஆஃப் பரோடா, தேனா பேங்க், விஜயா பேங்க் ஆகிய மூன்று வங்கிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. அதேபோல, இந்தியாவின் மிகப் பழைமையான அரசுத் துறை வங்கிகளில் ஒன்றான அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடட் பேங்க் ஆகிய இரண்டு வங்கிகளும் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதேபோல, சிண்டிகேட் பேங்க் கனரா வங்கியுடனும், ஆந்திரா பேங்க் மற்றும் கார்பரேஷன் பேங்க் ஆகியவை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியுடனும் இணைக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் இணைப்பால் தங்களுடைய டெபாசிட், கடன் ஆகியவை என்ன ஆகும் என்ற கவலை வாடிக்கையாளர்களிடையே எழுந்தது. ஆனால் வங்கியில் உள்ள வாடிக்கையாளர்கள் டெபாசிட் தொகை மற்றும் கடனுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை என உறுதியளிக்கப்பட்டது. தற்போது வங்கிகள் இணைப்பிற்கான செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் 13 நாட்களில் மாற உள்ள அதிரடி மாற்றம் குறித்து வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய வங்கி விதிமுறைகள் அமலுக்கு வர உள்ளது. அன்று முதல் தேனா பேங்க், விஜயா பேங்க், ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடட் பேங்க் ஆஃப் இந்தியா, ஆந்திரா பேங்க், அலகாபாத் பேங்க், கார்பரேஷன் பேங்க், சிண்டிகேட் பேங்க் ஆகிய வங்கி வாடிக்கையாளர்களின் பாஸ்புக், செக் புக் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கான புதிய செக் புக், பாஸ்புக் மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கனரா மற்றும் சிண்டிகேட் வங்க் மட்டும் ஜூன் 30ம் தேதி வரை வாடிக்கையாளர்கள் தங்களுடைய பழைய செக் புக்குகளை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
CineDesk