முதல்வரால் கதறும் எதிர்க்கட்சி!

0
70

தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தரத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்றையதினம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரசாரத்தை தொடங்கிய அவர் கும்பகோணத்தில் மூவேந்தர் முன்னேற்ற கழக வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

அந்த சமயத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததாவது வெற்றி நடை போடும் தமிழகம் என்ற வார்த்தையை கேட்டாலே ஸ்டாலின் கொந்தளிக்கத் தொடங்கி விடுகிறார். அரசின் வரிப்பணத்தை நாங்கள் வீணாக்குவதாக எங்கள் மீது குற்றம் சுமத்துகிறார். நாட்டு மக்களுக்கு நாங்கள் என்னென்ன நன்மை செய்து இருக்கிறோம் என்பதனை ஊடகம் மூலமாக நாங்கள் தெரிவித்து வருகிறோம். கோயம்புத்தூரில் திமுக சார்பாக நடத்தப்பட்ட செம்மொழி மாநாடு கருணாநிதியின் குடும்ப விழாவாக நடைபெற்றது. அந்த சமயத்தில் பல நூறு கோடிகள் அந்த விழாவிற்கு செலவிடப்பட்டனர் என்று தெரிவித்திருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தன் பள்ளிப் பருவ வயதில் இரண்டு கருணாநிதியின் மகன் என்ற சலுகையில் திமுகவில் செல்வாக்காக வலம் வந்து கொண்டிருந்தார். அவர் பள்ளியில் படிக்கும் தினங்களிலேயே அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியின் மகன் என்று தனி அதிகாரத்துடன் வலம்வந்து அதன் பிறகு நேரடியாக திமுகவின் முக்கிய பொறுப்புகளில் கருணாநிதியால் நியமிக்கப்பட்டு சொகுசாக பதவிக்கு வந்திருக்கிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.ஆனால் நான் இந்த முதல்வர் பதவிக்கு வருவதற்காக சுமார் 48 ஆண்டுகாலம் அதிமுகவில் கடுமையாக உழைத்திருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

ஆனால் ஸ்டாலின் திருச்சியில் நடைபெற்ற அந்த கட்சியின் மாநாட்டில் கதாநாயகனைப் போல வலம் வருகிறார் ஸ்டாலின். ஆனால் அவர் கதாநாயகன் கிடையாது காமெடியன் என்று தெரிவித்திருக்கிறார். அரசியலில் வேஷம் போட்டு திரியும் ஒரே நபர் ஸ்டாலின் தான் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தால், என்னிடம் தமிழக விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து கோரிக்கை வைத்தார்கள் அதன் விளைவாகவே நான் காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தேன்.

அதன் மூலமாக அங்கே இருக்கக்கூடிய விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாப்பாக இருக்கிறது.ஆனால் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்தது ஒருகாலத்தில் துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் தான் என்பதை மக்கள் யாரும் மறந்துவிட மாட்டார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.