நான் திருமணம் செய்யாமல் போனதற்கு அந்த கிரிக்கெட் வீரர்தான் காரணம் … – கவுசல்யா ஓபன் டாக்!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை கவுசல்யா. இவர் முதன்முதலாக மலையாள சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து, தமிழில் ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ என்ற படத்தில் நடித்தார்.
இதனையடுத்து, நேருக்கு நேர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். ,இதன் பின்பு ‘ஜாலி’, ‘பிரியமுடன்’, ‘சொல்லாமலே’ உட்பட தமிழ் மற்றும் மலையாளத்தில் 30 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான ‘பூவேலி’ படத்தில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் வாங்கியுள்ளார்.
ரொம்ப இடைவெளிக்குப் பிறகு நடிகை கவுசல்யா சின்னத்திரையில் நடித்து வருகிறார். தற்போது கவுசல்யாவிற்கு 43 வயதிற்கு மேல் ஆகிறது. ஆனால், இன்னமும் அவர் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வருகிறார். திடீரென்று இவர் குறித்து சமூகவலைத்தளங்களில் கவுசல்யா திருமணம் குறித்த தகவல் வைரலானது.
இதனையடுத்து, நடிகை கவுசல்யா ஒரு சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில், என்னைப் பற்றி சமூகவலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டால் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டேன். என் திருமணம் குறித்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாவது எனக்கு மகிழ்ச்சிதான். ஏனென்றால் மக்கள் என்னை இன்னும் மறக்கவில்லை.
நான் ரொம்ப பிரபல நடிகையாக வலம் வந்த காலத்தில் ஒரு கிரிக்கெட் வீரருடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டேன். எனக்கு பிடித்தமான ஒருத்தர் என் வாழ்க்கையில் இருந்தார். ஆனால், ஏதோ சில காரணங்களால் அது பிரேக் அப் ஆகிவிட்டது. ஆனால், இன்று வரை என் மனசுக்கு பிடித்த ஆளை பார்க்கவில்லை. வாழ்க்கை முழுவதும் அவர் என் கூட வருவார் என்ற நம்பிக்கையும் இல்லை. அதனால், நான் திருமணம் செய்து கொள்ளாமலேயே என் பெற்றோரிடமே சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன்.
தற்போது நான் பிஸியாக நடித்து வருகிறேன். எனக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சினை ஏற்பட்டபோது நிறைய மாத்திரை சாப்பிட்டேன். அப்போ எனக்கு உடல் பருமனாகிவிட்டது. இதைப் பார்த்து கூட சிலர் என்னை கிண்டல் செய்தார்கள். அதனால் நான் சினிமாவிலிருந்து விலகினேன் என்று அந்த பேட்டியில் வெளிப்படையாகவே பேசினார்.