சசிகலா நம்பும் அந்த எளிய நபர்!

Photo of author

By Sakthi

திருமதி சசிகலா மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் செயல்கள் மட்டும் இல்லாமல் அவருடைய கார் ஓட்டுனர், மற்றும் கார் போன்ற அனைத்தையும் பயன்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

சசிகலா உடைய தமிழக வருகை அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர் பெங்களூரில் இருந்து சென்னை வந்தது வரையில், பலவிதமான சுவாரஸ்ய நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்கு வருட காலம் சிறை தண்டனை முடிவுற்ற பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா, கொரோனா காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .அதன் பிறகு பெங்களூரு நகரில் இருக்கின்ற அவருடைய பண்ணை வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார் இந்த நிலையில், நேற்று காலை சுமார் 7 மணியளவில் பெங்களூரு நகரில் இருந்து சென்னை திரும்பிய சசிகலா வழிநெடுகிலும் ஆதரவாளர்களின் வரவேற்பில் நனைந்து கொண்டே வந்ததால் அவர் கூறிய வருகையானது தாமதமானது.

இதற்கிடையே அதிமுகவின் கொடியை சசிகலா தன்னுடைய காரில் பறக்க விட்ட விவகாரம் காரணமாக, அவர் பயணித்த கார்கள் மாறிக்கொண்டே வந்தன. இந்த நிலையில் தொண்டர்கள் உடைய வரவேற்பு காரணமாக, இன்று அதிகாலை சுமார் 6 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தார். சசிகலா அதற்கு முன்பாக ராமாபுரத்தில் இருக்கின்ற எம்ஜிஆர் வீட்டிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிறகு சசிகலாவும், இளவரசியும், தினகரன் போன்ற குடும்ப உறுப்பினர்களும் சென்னை வந்தார்கள்.

பெங்களூரு நகரில் இருந்து சென்னை வரையில், சுமார் 23 மணி நேரத்திற்கு மேலாக சசிகலா பயணம் மேற்கொண்ட காரணத்தால், சசிகலா பயணம் செய்த காரை ஓட்டி வந்த ஓட்டுநர் பங்கு மிகப் பெரியது என்று சொல்லப்படுகிறது. பயணம் செய்து வந்த காரை பிரபு என்பவர் ஓட்டி வந்திருக்கிறார். தொண்டர்கள் திடீரென வந்து சூழ்ந்த நேரத்தில் எல்லாம் மிகவும் பொறுமையாகவும், நேர்த்தியாகவும் ,காரை இயக்கி இருக்கின்றார். அவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனராக 25 வருடங்களாக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது