இந்த பகுதியில் கண்ணிமைக்கும் நொடியில் ஏற்பட்ட விபத்து! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Photo of author

By Parthipan K

இந்த பகுதியில் கண்ணிமைக்கும் நொடியில் ஏற்பட்ட விபத்து! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Parthipan K

Updated on:

The accident happened in the blink of an eye in this area! Death without treatment!

இந்த பகுதியில் கண்ணிமைக்கும் நொடியில் ஏற்பட்ட விபத்து! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு வள்ளவிளை பகுதியை சேர்ந்தவர் வேலப்பன்(65) .இவர் கயிறு தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.இவருடைய மகள் சரண்யா. இவர் நாகர்கோவில் அருகே வசித்து வருகிறார்.வேலப்பன் அவருடைய மகளை பார்க்க நேற்று மோட்டர்சைக்களில் இரவு மொட்ட விளை சந்திப்பில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது.அந்த வாகனம் எதிர்பாராதவிதமாக வேலப்பன் வந்த மோட்டர்சைக்களின் மீது மோதியது.அதில் வேலப்பன் தூக்கி வீசப்பட்டார்.

கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்தனர்.இந்நிலையில்  சிகிச்சை பலனின்றி இன்று காலை வேலப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.