1986 தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிமுக கட்சி! எம்ஜிஆரின் கோபத்துக்கு பயந்து படத்தின் பெயரை மாற்றிய கமல்!
1986ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக கட்சி படுதோல்வியை சந்தித்தது. எதிர்கட்சியாக இருந்த திமுக வெற்றி பெற்றது. அப்பொழுது இயக்குநர் சி.வி ஸ்ரீதர் அவர்கள் இயக்கத்தில் நடிகர் கமலின் நடிப்பில் உருவான மீண்டும் சூர்யோதயம் என்ற திரைப்படத்தின் பெயரைத் தான் எம்ஜிஆரின் கோபத்துக்கு பயந்து கமல் மற்றும் இயக்குநர் சி.வி ஸ்ரீதர் அவர்கள் மாற்றியுள்ளனர்.
ஆம் அதாவது 1986ம் ஆண்டு ஆளுங்கட்சியாக இருந்து தேர்தலை சந்தித்தது எம்ஜிஆர் அவர்களின் தலைமையிலான அதிமுக கட்சி. அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் தலைமையிலான அதிமுக கட்சி மொத்தம் உள்ள 97 நகராட்சிகளில் 11 நகராட்சிகளில் மட்டுமே வெற்றி பெற்று தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது.
எதிர்கட்சியாக இருந்த திமுக கட்சி 64 நகராட்சிகளை பெற்று அமோக வெற்றி பெற்றது. அந்நேரத்தில் இயக்குநர் சி.வி ஸ்ரீதர் அவர்கள் நடிகர் கமல்ஹாசன் அவர்களை வைத்து “மீண்டும் சூர்யோதயம்” என்ற பெயரில் இயக்கிய படத்தை வெளியிட முடிவு செய்தனர். ஆனால் திமுக கட்சியின் சின்னம் சூரியன். அந்த தேர்தலில் திமுக கட்சி வெற்றி பெற்றது. இதனால் இந்த நேரத்தில் மீண்டும் சூர்யோதயம் என்ற பெயரில் படத்தை வெளியிட்டால் திமுக கட்சியின் வெற்றியை கொண்டாடும் விதமாக படம் வெளியாகி இருக்கின்றது என்று எம்ஜிஆர் அவர்கள் நினைத்துக் கொள்வார். அவ்வாறு நினைத்துக் கொண்டால் அவருடைய கோபத்திற்கு ஆளாகி விடுவோம் என்றுபயந்த படக்குழு உடனே படத்தின் பெயரை ‘நானும் ஒரு தொழிலாளி’ என்று மாற்றினர்.
ஆம் எம்ஜிஆர் அவர்கள் ரஜினிகாந்த் சொல்வது போல நல்லவருக்கும் நண்பருக்கும் மிக்க நல்லவர். அதே போலத்தான் எதிர்க்கும் ஆட்களுக்கும். அதனால் எம்ஜிஆர் அவர்களின் கோபத்திற்கு ஆளானால் ஆள் அடையாளம் இல்லாமல் துடைத்து அழித்து விடுவார் என்று பயந்த இயக்குநர் சி.வி ஸ்ரீதர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் படத்தின். பெயரை மாற்றியுள்ளனர்.
கமல்ஹாசன் அவர்களின் படத்திற்கு நானும் ஒரு தொழிலாளி என்று பெயர் வைத்ததற்கும் ஒரு பிளாஷ்பேக் உள்ளது. 1965ம் ஆண்டு இயக்குநர் சி.வி ஸ்ரீதர் அவர்கள் எம்ஜிஆர் அவர்களை வைத்து நானும் ஒரு தொழிலாளி என்ற திரைப்படத்தை இயக்கினார். இதில் நடிகை லதா கதாநாயகியாக நடித்தார். ஆனால் சில நாட்கள் வரை நடந்த படப்பிடிப்பு சில காரணங்களால் கைவிடப்பட்டது.
இதையடுத்து கமல்ஹாசன் அவர்களின் மீண்டும் சூர்யோதயம் என்ற திரைப்படத்தின் பெயரை நானும் ஒரு தொழிலாளி என்று மாற்றி எம்ஜிஆர் அவர்களை கோபம் அடையச் செய்யாமல் இயக்குநர் சி.வி ஸ்ரீதர் அவர்கள் தப்பித்துக் கொண்டார். மேலும் கமல்ஹாசன் அவர்கள் நடித்து பெயர் மாற்றம் செய்யப்பட்ட நானும் ஒரு தொழிலாளி மே 1ம் தேதி வெளியானது. மேலும் மே 1ம் தேதி உழைப்பாளர் தினம் என்பதால் அந்த பெயர் பொருத்தமாக அமைந்தது.