மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் உள்ள இந்த விமான நிலையங்கள் தனியாருக்கு வழங்கப்படும்!
தமிழகத்தின் முக்கியமான நான்கு விமான நிலையங்கள் என்றால் அவை சென்னை, கோவை, மதுரை,திருச்சி தான்.நடப்பாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில் அரசுக்கு சொந்தமான சொத்துக்களை தனியாருக்கு குத்தகை விட்டு அதன் மூலம் நிதி திரட்டும் தேசிய பணமாக்கல் திட்டம் அறிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள அரசுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு விடுவதன் மூலமாக ரூ ஆறு லட்சம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.அதனுடைய முதல் கட்டமாக தான் கடந்த ஆண்டு டெல்லி,மும்பை,லக்னோ,அகமதாபாத்,மங்களூரு.ஜெய்ப்பூர்,கவுகாத்தி,திருவனந்தபுரம் உள்ளிட்ட எட்டு விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகை விடப்பட்டது.
இதனை தொடர்ந்து 2022-2025 ஆம் ஆண்டுக்குள் 25 விமான நிறுவனங்கள் குத்தகைக்கு விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது என மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் நேற்று நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தில் தெரிவித்தார். தேசிய பணமாக்கல் திட்டத்தின் கீழ் 2022 முதல் 2025 ஆம் ஆண்டுக்குள் இந்திய விமான நிலைய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை, திருச்சி, மதுரை, கோவை, புவனேஸ்வர், வாரணாசி,அமிர்தசரஸ்,இந்தூர்,ராய்ப்பூர்,கோழிக்கோடு,நாக்பூர்,பாட்னா,சூரத்,ராஞ்சி,ஜோத்பூர்,விஜயவாடா, வதோதரா, திருப்பதி,இம்பால்.அகர்தலா,உதய்பூர்,டேராடூன் மற்றும் ராஜமுந்திரி ஆகிய 25 விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
விமான நிலையங்களை குத்தகைக்கு விடுவதன் மூலம் வரும் பணத்தின் மூலம் உள்கட்டமைப்புகளுக்காக செலவிட உள்ளனர்.இந்நிலையில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய விமான நிலையங்களும் குத்தகைக்கு விடப்படும்.இதில் நடப்பு நிதியாண்டில் திருச்சி விமான நிலையம், அடுத்த நிதியாண்டில் கோவை மற்றும் திருச்சி விமான நிலையம் மற்றும் 2024 ஆம் ஆண்டு நிதியாண்டில் சென்னை விமான நிலையமும் தனியாருக்கு குத்தகைக்கு வழங்கப்படும்.தற்போது குத்தகைக்கு விடப்படும் 25 விமான நிலையங்கள் மூலம் ரூ13,945 கோடி நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.