மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த குறிப்பிட்ட தேதிகளில் சதுரகிரி கோவிலில் பக்கதர்களுக்கு அனுமதி இல்லை!

மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த குறிப்பிட்ட தேதிகளில் சதுரகிரி கோவிலில் பக்கதர்களுக்கு அனுமதி இல்லை!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.பத்து மற்றும் பனிரெண்டாம் மாணவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.

இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில்  மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.பள்ளி ,கல்லூரிகள் ,தொழிற்சாலை போன்றவைகள் வழக்கம் போல் தொடங்கியுள்ளது.விடுமுறை நாட்களில் மக்கள் சுற்றுலா போன்ற தலங்களுக்கும் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியது.மேலும் மழை தீவிரம் அடைந்து வருகின்றது அதனால் அனைத்து பகுதிகளிலும் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகின்றது.ஒருசில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது.தற்போது வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிளும்தொடர்ந்து கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகின்றது.

மலையின் காரணமாக கோவிலிற்கு செல்லும் பாதைகளில் உள்ள ஓடைகள் நிரம்பி வருகின்றது.அதனால் ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி வருகிற ஐந்தாம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை பக்கதர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை எனவும் வனத்துறை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.மேலும் வனத்துறையினர் பக்கதர்களுக்கு அனுமதி இல்லை அதனால் மேற்கண்ட நாட்களில் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு வர கூடாது எனவும் அறிவித்துள்ளனர்.

Leave a Comment