அரசு வெளியிட்ட அறிவிப்பு!இன்று முதல்வர் தொடங்கி வைக்கும் புதுமைப்பெண் திட்டத்தின் இரண்டாவது கட்டம்!
தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பெண் கல்வியை பெருமைப்படுத்தும் விதமாக உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழ்நாட்டின் நல் குடிமக்களை பேணும் உயர் கல்வி கற்ற பெண்களாகவும், தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும், கல்வி அறிவு போன்றவற்றை உருவாக்க வேண்டும் என்று புதுமை பெண் திட்டம் கொண்டுவரப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்ற விழாவில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரவால் அவர்கள் கூறுகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து அதன் பிறகு உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க புதுமைப்பெண் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு உயர் கல்வி அளித்து பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தை தடுத்தல், குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக உயர்கல்வி படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூகம் மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்யப்படுகிறது என இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.
மேலும் புதுமைப்பெண் திட்டத்தின் முதற்கட்டத்தில் ஒரு லட்ச மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் இடைநீற்றலில் இருந்து 12000 மாணவிகள் மீண்டும் உயர்கல்வியை சேர்ந்து பயின்று வருகின்றனர்.
தற்போது மேலும் ஒரு லட்சம் மாணவிகள் பயன்பெறும் வகையில் புதுமைப்பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.திருவள்ளுவர் மாவட்டம் பட்டாபிராமம் இந்து கல்லூரியில் நடைபெற உள்ள விழாவில் புதுமைப்பெண் திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அமைச்சர் கீதா ஜீவன், அமைச்சர் திரு. சா.மு நாசர், நாடாளுமன்றம் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை செயலாளர், சமூக நலத்துறை இயக்குனர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.