பக்தர்களின் கவனத்திற்கு! இந்த தேதியில் சிறப்பு பூஜைக்காக மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!

0
256
Attention devotees! On this date Sabarimala Ayyappan Temple is reopened for special pooja!
Attention devotees! On this date Sabarimala Ayyappan Temple is reopened for special pooja!

பக்தர்களின் கவனத்திற்கு! இந்த தேதியில் சிறப்பு பூஜைக்காக மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!

பக்தர்கள் அதிக அளவு மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில்தான். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மண்டல மகர விளக்கு சீசன் கடந்த மாதம் 20ஆம் தேதி முடிவடைந்தது. இந்த சீசனில் ரூ 380 கோடி வருமானம் தேவஸ்தானத்திற்கு கிடைத்தது.

இருப்பினும் சன்னிதானத்தை சுற்றி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த காணிக்கை பெட்டிகளில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் குறிப்பாக நாணயங்கள் தற்போது வரை கணக்கில் சேர்க்கப்படாமல் உள்ளது.அந்த நாணயங்களை எண்ணுவதற்கு தேவஸ்தானத்தின் சார்பில் 540 ஊழியர்கள் கொண்ட குழு சன்னிதானம் சென்றுள்ளது.

அவர்கள் காணிக்கை பணத்தை எண்ணும் பணியை தொடங்கி விட்டனர். ரூ18 கோடி குவிக்கப்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாதந்தோறும் தமிழ் மாதம் தொடக்கத்தில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும்.

அதன்படி மாசி மாதம் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 12-ம் தேதி மாலை திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து மறுநாள் முதல் 17ஆம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.மாசி மாத பூஜைக்காக நடை திறக்கப்படுவதற்கு முன்னதாகவே கிடைத்த நாணயங்களை எண்ணி முடிக்க திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
Parthipan K