ரயில் பயணிகளின் கவனத்திற்கு! இனி வாட்ஸ் அப் மூலம் தான் டிக்கெட் பெற முடியும்?
கடந்த அக்டோபர் மாதம் முதலில் இருந்து பண்டிகை தொடங்கியது.அதனால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டது.தீபாவளி பண்டிகையில் பொழுது மக்கள் அவர்கள் பணிபுரியும் இடம் மற்றும் மாணவ மாணவிகள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக இருக்க சிறப்பு பேருந்துக்குள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.
மேலும் தற்போதுள்ள பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்பு கின்றனர்.அந்த வகையில் மெட்ரோ ரயில் சேவையும் ஒன்று தான்.பணிக்கு செல்பவர்களுக்கு இத மெட்ரோ ரயில் சேவையானது மிகவும் வசதியாக உள்ளது என கூறப்படுகிறது.
தற்போது மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் பெங்களூரில் கன்னட ராஜ்யோத்சவா தினத்தையொட்டி மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நேற்று பயணிகள் வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் எடுத்து பயணிக்க தேவையான நடவைடிக்கைகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் எடுத்தது.ராஜ்யோத்சவா தினத்தில் மொத்தம் 1669 பயணிகள் வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் எடுத்து பயணம் செய்தார்கள் என தெரிவித்தனர்.மேலும் வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் எடுத்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய 14ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புதிதாக இணைந்துள்ளனர் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.