கண் இமைக்கும் நொடியில் சரிந்த பேனர்!! மத்திய அமைச்சர் பொதுக்கூட்டத்தில் திடீர் பரபரப்பு!!

Photo of author

By Rupa

கண் இமைக்கும் நொடியில் சரிந்த பேனர்!! மத்திய அமைச்சர் பொதுக்கூட்டத்தில் திடீர் பரபரப்பு!!

தற்பொழுது திருவிழாக்கள் அரசியல் நிகழ்வுகள் என எது நடைபெற்றாலும் திரும்பிய இடமெல்லாம் பெரிய பெரிய கட் அவுட் பேனர்கள் இல்லாத இடமே இல்லை. ஒரு சில வருடங்களுக்கு முன்பே இந்த பேனர் வைத்து சென்னையில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து பல புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தினர்.

அந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் பெயருக்குத்தான் என்பது போல கிடப்பிலே போடப்பட்டது. ஏனென்றால் இம்மாதம் தொடக்கத்தில் கோவை மாவட்டத்தில் இதேபோல பேனர் விழுந்து மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவ்வாறு ஒவ்வொரு உயிரிழப்பிற்கு பிறகு தான் தமிழக அரசானது தீவிர நடவடிக்கையை எடுக்க முற்படுகிறது.

அந்த வகையில் மூவர் உயிரிழந்த பிறகு நகராட்சி அமைப்பானது புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் இனி அனுமதி இன்றி வைக்கப்படும் பேனர்கள் மற்றும் பதாகைகள் உண்டான நிறுவனங்கள் மீதும் அல்லது தனிநபர் வைத்தால் அவர்கள் மீதும் அதற்கு அனுமதி அளிக்கும் கட்டிட உரிமையாளர்கள் மீதும் கட்டாயம் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் மூன்றாண்டு சிறை தண்டனை என வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

அதேபோல அந்த பேனர் வைப்பதற்கான உரிமம் காலம் முடிந்து அகற்றாமல் இருந்தால் அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்துள்ள அமித்ஷா வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார்.

இவர் வருகையொட்டி வேலூர் மாவட்டம் மற்றும் அந்த பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் என சுற்றி எங்கு பார்த்தாலும் பேனர் மாயமாகவே உள்ளது. அவ்வாறு பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள பேனரானது  யாரும் எதிர்பாராத வண்ணம் திடீரென கீழே விழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த பேனர் அருகில் யாரும் இல்லாததால் எந்த ஒரு மக்களுக்கும் உயிர் சேதமும் ஏற்படவில்லை.

யாரேனும் பேனர் அருகில் நின்றிருந்தால் கட்டாயம் ஏதேனும் அசம்பாவிதம் அரங்கேறியிருக்கும். பல அசம்பாவிதங்களை தடுக்கும் பட்சத்தில் அரசானது பல்வேறு நடவடிக்கைகளை அமல்படுத்தி வந்தாலும் அதனையும் மீறி இவ்வாறான எதிர்பாராத விபத்துக்கள் அரங்கேற தான் செய்கின்றது.

அந்த வகையில் முதலில் இந்த பேனர் வைக்கும் கலாச்சாரத்தை ஒவ்வொரு கட்சியினரும் குறைத்துக் கொள்ள வேண்டும்.அப்பொழுது தான் பின்னர் வருபவர்களும் அதனை குறைத்துக் கொள்ள முற்படுவார்கள்.அனுமதி அளித்து பேனர்கள் வைக்கும் பட்சத்தில் யாரும் எதிர்பாராத சூழலில் இவ்வாறன உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க இது ஓர் முதல் படியாக இருக்கும்.