இரு நாடுகளுமே ஆதரவை கடைப்பிடிப்பதே சிறந்த வழி

இந்தியாவுக்கும்  சீனாவுக்கும் லடாக் எல்லை பிரச்சினையால் மோதல்கள் நீடித்து வருகிறது.  கடந்த ஜூன் மாதத்தில் இந்திய ராணுவத்திற்கும் சீன ராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் சில வீரர்கள் இறந்தனர். இந்த மோதல் காரணமாக சீன செயலியான டிக்டாக் உள்ளிட்ட பல சீன செயலிகளை இந்தியா தடை செய்தது. 2 மாதங்களுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையில் எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த பிரச்சினையை தீர்க்க பல தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனினும் சீனா இதற்கு முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என இந்தியா தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

ஷோ லிஜியான்  சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளரான இவர் பிரதமர் மோடி அவர்கள் பேசும்போது அதை நாங்கள் கவனித்தோம். இரு நாடுகளுமே பரஸ்பர மரியாதையையும், ஆதரவையும் கடைப்பிடிப்பதே சிறந்த வழி. நமது பரஸ்பர அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தவும், வேறுபாடுகளை களையவும், நடைமுறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், நீண்டகால அடிப்படையில் இருதரப்பு உறவை பாதுகாக்கவும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருக்கும் என்று அவர் கூறினார்.

 

 

 

 

Leave a Comment