வசமாக மாட்டிய பைக் திருடன்! இத்தனை ஆண்டுகள் சிறை தண்டனையா?

Photo of author

By Parthipan K

வசமாக மாட்டிய பைக் திருடன்! இத்தனை ஆண்டுகள் சிறை தண்டனையா?

Parthipan K

The bike thief caught in the hand! So many years in prison?

வசமாக மாட்டிய பைக் திருடன்! இத்தனை ஆண்டுகள் சிறை தண்டனையா?

கடலூர் மாவட்டம் திடீர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். இவரது மகன் வி தியாகராஜன் (35). இவர் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடும் பணியில் ஈடுபட்டு வந்தார். அதைத்தொடர்ந்து ராசிபுரம் காவல் துறையில் ஆறு வழக்குகள் தியாகராஜன் மீது பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இது தொடா்பான வழக்கு ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தற்போது இந்த வழக்கை விசாரணை மேற்கொண்ட ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் ரெஜினா பேகம் தொடர்ந்து வாகனம் திருடி ஆறு வழக்குகளில் சிக்கிய தியாகராஜன்க்கு ஒரு திருட்டுக்கு  தலா 3 ஆண்டுகள் என்ற அடிப்படையில் குற்றவாளி தியாகராஜனுக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

இதைத்தொடர்ந்து இருசக்கர வாகனத்திருடில் ஈடுபட்ட வந்து தியாகராஜனுக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய ராசிபுர குற்றவியல் நீதிமன்ற நடுவர் ரெஜினாபேகம் அவர்களுக்கு  மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.