பள்ளி சிறுமியை கடத்திய வாலிபன் கைது!

0
244
The boy who kidnapped the school girl was arrested!
The boy who kidnapped the school girl was arrested!

 

பள்ளி சிறுமியை கடத்திய வாலிபன் கைது!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கடையம்பட்டி தாலுகா பொம்மியம் பட்டி ஊராட்சி மேல் கோம்பை பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேலு. இவருக்கு ஜெயலட்சுமி என்ற  மனைவியும் 16 வயது ஒரு மகளும் உள்ளனர். இவர்களது மகள் பொம்மையம்பட்டி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாள். இவளது பெற்றோர் தினந்தோறும் வேலைக்கு சென்று விடுவார்கள். அந்த பெண் பள்ளி முடிந்ததும் தினம்தோறும் நேரமாகவே வீட்டிற்கு வருவாள். இவளது பெற்றோர் வேலை முடித்து வந்தனர். அவர்களது தாயார் வீடு முழுவதும் தேடியும் எங்கும் தேடியும் காணவில்லை.

காரையம்பட்டி அருகே உள்ள கொங்கராம்பட்டி ஏரி மேடு பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் என்பவர். இவருக்கு  திருமண வயத்தில் விக்ரம் என்ற மகன் உள்ளன். இவனுக்கு 21 வயது ஆகிறது. இவன் பொம்மையம்பட்டி பகுதியில் கூலி வேலை செய்து வருகின்றான்.  இவன் வேலைக்கு செய்வதற்காக அடிக்கடி பொம்மையம்பட்டி பகுதிக்கு வருவான். இதனால்16 வயது பள்ளி மாணவிகளுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவி வீட்டில் இருந்து காணாமல் போனால்.

இது குறித்து அவரது தாயார் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கொங்காரம்பட்டி பகுதியில் தீவிரமாக விசாரணை மேற்க்கொண்டனர். போலீசார் அப்பகுதில் பதுக்கி இருந்த விக்ரம் என்ற வாலிபரை கைது செய்தனர். பின்னர் 16 வயது சிறுமியை மீட்டனர்.

தொடர்ந்து தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் பொறுப்பு இந்திரா 16 வயது சிறுமியை கடத்திய வாலிபர் விக்ரம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிய வந்ததை தொடர்ந்து. இந்த வாலிபனை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி அவரை போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

 

Previous articleஅரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!
Next articleசேலம் மாவட்டத்தில் லாரி மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதி முழுவதும் பரபரப்பு!