திருமணத்திற்கு அடுத்தநாளே மணப்பெண் உயிரிழப்பு!! உடல் நலக்குறைவால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நவிதாஸ் மாவட்டத்தில் கோபிகஞ்ச் எனும் பகுதி உள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் தான் ரோஷ்னி. இவருக்கு வயது 21 ஆகிறது.
இவருக்கு கல்யாண வயது வந்ததை அடுத்து இவரின் பெற்றோர்கள் இவருக்கு முக்தார் அகமது என்பவருடன் திருமணம் செய்து வைத்தனர்.
இது கடந்த 17 ஆம் தேதி அன்று நடைபெற்றது. இவருக்கு வயது இருபத்து இரண்டு.
இவர்களது திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்த நிலையில் மேற்படி இவர்களின் திருமண வரவேற்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் பல்வேறு நபர்களும் புதுமண தம்பதிகளுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அப்போது திடீரென புதுமணப் பெண்ணான ரோஷ்னிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எதனால் ஏற்பட்டது என்று அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இவருக்கு வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்பட்டதால் இவரின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இவரின் உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவே ரோஷ்னியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
ரோஷ்னிக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் திங்கட்கிழமை மாலை அன்று இவர் உயிர் பிரிந்தது. திருமணமான அடுத்த நாளே புதுமணப்பெண் வாந்தி,வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு திடீரென மணப்பெண் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே கேள்வியை ஏற்படுத்தி வருகிறது.