அண்ணனுடைய மனைவியை கொலை செய்த தம்பி! போலீசில் அளித்த வாக்குமூலம்!  

Photo of author

By CineDesk

அண்ணனுடைய மனைவியை கொலை செய்த தம்பி! போலீசில் அளித்த வாக்குமூலம்!  

CineDesk

The brother who killed his brother's wife! Police statement!

 

அண்ணனுடைய மனைவியை கொலை செய்த தம்பி! போலீசில் அளித்த வாக்குமூலம்!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அருகே உள்ள கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு முருகேசன்,ரவி ,வெங்கடேசன்,காசிநாதன் ஆகிய 4மகன்களும்,மகாலட்சுமி அன்ர மகளும் உள்ளனர்.இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.மேலும் வெங்கடேசன் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு செஞ்சியை சேர்ந்த பிரேமலதா (வயது 25) என்பரை திருமணம் செய்து கொண்டார். சில நாட்களுக்கு முன்பு வேலை காரணமாக வெங்கடேசன் சென்னைக்கு சென்றுவிட்டார்.

இதனால் பிரேமலதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்நிலையில் வெங்கடேசன் தம்பியான காசிநாதன் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்து பிரேமலதாவை திடீரென கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்தார். பின்னர் அவர் ராமநத்தம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அப்போது அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் எனது 2-வது அண்ணன் ரவியின் மனைவி ராதிகா அடிக்கடி என்னிடம் நம் குடும்பத்தை பிரிந்து வெவ்வேறு ஊரில் வசித்து வருவதற்கு காரணம் பிரேமலதா தான்  எனக் கூறினார்.

இதனால் பிரேமலதா மீது எனக்கு கடும் கோபம் ஏற்பட்டது. இதையடுத்து, குடும்பத்தை பிரித்த பிரேமலதாவை கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி, வீட்டில் தனியாக இருந்த அவரை கத்தியால் குத்திக் கொலை செய்தேன்” என தெரிவித்தார். இதையடுத்து காசிநாதனை போலீஸார் கைது செய்தனர். இதைதொடர்ந்து காசிநாதன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.