நடு ரோட்டில் 8 மாத கர்ப்பிணிக்கு நடந்த கொடூர செயல்!! நெஞ்சை உலுக்கிய சம்பவம்!!

Photo of author

By CineDesk

நடு ரோட்டில் 8 மாத கர்ப்பிணிக்கு நடந்த கொடூர செயல்!! நெஞ்சை உலுக்கிய சம்பவம்!!

இந்தியாவில் கொலை கொள்ளை போன்ற சம்பவத்திற்கு பஞ்சம் இல்லை.குறிப்பாக மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் ஓரளவு சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருந்தாலும் அவ்வப்போது சில குற்றங்கள் நடந்து கொண்டே தான் உள்ளது. குறிப்பாக கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இதிலும் சென்னையில் இது போன்ற பல சம்பவங்கள் அடிக்கடி நடந்துள்ளது. குழந்தைகளை கடத்துதல், பெண்களின் கழுத்தில் உள்ள தங்க நகைகளை பறித்து செல்லுதல் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள பல்லாரத்தில் உள்ள ஒரு கடைக்கு அருகில் உள்ள கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டு இருந்த 8 மாத நிறை கர்பிணியின் கழுதில்லிருந்த 11 சவரன் தங்க நகையை பறித்து சென்ற சம்பவம் பார்ப்போரின் நெஞ்சப் பதைபதைக்க வைத்துள்ளது.

பட்டப் பகலில் சாலையோரத்திலிருந்த பிள்ளையார் கோவில் ஒன்றில் நின்று சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார் ஒரு நிறை மாத கர்பிணி. அவ்வழியே இருசக்கர வாகனம் ஒன்றில் வந்த 2 நபர்களில் ஒரு நபர் வண்டியில் இருந்து இறங்கி அந்த பெண்மணியை நோக்கி வந்தார். அந்த பெண் கண்களை மூடி சாமி வழிபாட்டில் இருந்தார்.

இந்த நேரத்தில் சற்றும் எதிர்பாராத நிலையில் அந்த 8 மாத நிறை கர்பிணியை சாலையில் தள்ளிவிட்டு நிறைமாத கர்பிணி என்றும் பாராமல் கழுத்திலிருந்த 11 சவரன் நகையை பிடித்தவாறு சாலையில் தரதரவென இழுத்து சென்ற சம்பவம் பார்ப்போரின் நெஞ்சை பதை பதைக்க வைத்தது. அந்த சாலையில்  ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருந்த நிலையிலும் அந்த பெண்ணைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. இந்த சம்பவம் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.