திருமணமான ஒரு வருடத்தில் கணவனால் நேர்ந்த கொடூரம்!! சாத்தான் பெயரில் நடந்தேறிய அவலம்!! 

Photo of author

By Amutha

திருமணமான ஒரு வருடத்தில் கணவனால் நேர்ந்த கொடூரம்!! சாத்தான் பெயரில் நடந்தேறிய அவலம்!! 

Amutha

The brutality of the husband in one year of marriage!! What happened in the name of Satan!!

திருமணமான ஒரு வருடத்தில் கணவனால் நேர்ந்த கொடூரம்!! சாத்தான் பெயரில் நடந்தேறிய அவலம்!!

திருமணமான ஒரு வருடத்தில் கணவர் மனைவியை கொலை செய்துள்ளார். அதுவும் சாத்தான் கூறியதால் கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கொடூர சம்பவம் மெக்ஸிகோ நாட்டில் நடைபெற்று உள்ளது. சாத்தான் கூறியதால் மனைவியை கொன்று அவரது மூளையை எடுத்து தின்றுவிட்டு மண்டையோட்டை சாம்பலாக்கி உள்ளார்.

மெக்சிகோவை  நாட்டைச் சேர்ந்தவர் அல்வாரோ வயது 32. இவரது மனைவி மரியா மான்செராட் வயது 39. மரியாவுக்கு ஏற்கனவே குழந்தைகள் உள்ள நிலையில் இந்த ஜோடிக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. மரியாவின் மூத்த மகளுக்கு 23 வயதும், இளைய மகளுக்கு 12 வயது ஆகிறது.

இந்த சூழ்நிலையில் அல்வாரோவை காதலித்த மரியா அவரை திருமணம் செய்து கொண்டார். அல்வாரோ போதைப் பொருளுக்கு அடிமையானதுடன் சாத்தானை வழிபடும் குழுவைச் சார்ந்தவர்.

இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக மரியாவை காணவில்லை. பின்னர் காவல் நிலையத்துக்கு புகார் சென்றதும், விசாரணையில் கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி அல்வாரோ,  தனது மனைவியை சுத்தி, உளி, மற்றும் கோடாரியால் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் போட்டு வீட்டின் பின்னால் உள்ள பள்ளத்தாக்கில் வீசி உள்ளார். சில பாகங்களை மட்டும் எடுத்து பாதுகாத்து வைத்துள்ளார்.

மேலும் அவர் விசாரணையில் சாத்தான் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்ததாகவும், அதன் காரணமாக தனது மனைவியை கொலை செய்து மூளையை தின்றுவிட்டு, மண்டையோட்டை எடுத்து சாம்பலாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். அவரின் இந்த வாக்குமூலத்தை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.