நிலத்தகராறில் ஏற்பட்ட கொடூரம்!! பேசிக் கொண்டிருக்கும் போதே டிராக்டரை சகோதரன் மீதி ஏற்றி இறக்கிய அதிர்ச்சி சம்பவம்!!
சகோதரனை நிலப் பிரச்சனையில் டிராக்டரை ஏற்றி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது பாரத்பூர். இந்த கிராமத்தில் பகதூர் சிங் மற்றும் அவரது சகோதரன் அதர் சிங் ஆகிய இருவர் வசித்து வந்துள்ளனர். இவர்களிடையே நீண்ட காலமாக நிலம் தொடர்பான பிரச்சனை நீடித்து வந்துள்ளது. இரண்டு தரப்பினர் இடையே இந்த பிரச்சனையானது சமரசம் செய்யப்படாமல் தொடர்ந்து வந்த நிலையில் இன்று காலை பகதூர் சிங் குடும்பத்தினர் டிராக்டர் உடன் பிரச்சனை ஏற்பட்ட நிலப்பகுதிக்கு சென்றுள்ளனர்.
பகதூர் சிங் செல்வதை அறிந்த அதர் சிங் அவரும் தனது குடும்பத்தினருடன் அந்தப் பகுதிக்கு சென்றுள்ளார். இரண்டு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென பகதூர் சிங் மகனான தாமோதரன் என்பவர் கொண்டு வந்த டிராக்டரால் பிரச்சனைக்குரிய நிலப்பகுதியை உழுதுள்ளார். இந்த நிகழ்விற்கு அதர் சிங் மற்றும் அவரது மகனும் தாமோதரன் சகோதரனுமான நிர்பத் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் தாமோதரன் மேலும் உழுவதற்கு இடம் தராமல் டிராக்டர் முன்பு நின்றுள்ளார்.
ஆனால் அவர் நிற்பதையும் பொருட்படுத்தாமல் தாமோதர் ஆத்திரத்தில் டிராக்டரை முன்னும் பின்னுமாக தொடர்ந்து வேகமாக இயக்கியுள்ளார். அவர் திடீரென இயக்கியதில் நிலைகுலைந்த நிர்பத் டிராக்டருக்குள் சிக்கிக்கொண்டார். ஆனாலும் டிராக்டரை இயக்குவதை நிறுத்தாத தாமோதர் வேகமாக இயக்கியதில் அவரது சகோதரன் மீது எட்டு முறை டிராக்டரின் டயர்கள் ஏறி இறங்கியது.
கண்ணெதிரே திடீரென நிகழ்ந்த இந்த கோர சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே நிர்பத் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தடுக்கச் சென்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் டிராக்டர் மோதியதில் படுகாயம் அடைந்தனர்.
இந்த கொடூர சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சகோதரனையே டிராக்டரை ஏற்றி கொலை செய்த தாமோதரை கைது செய்தனர். இந்த விபத்தில் காயம் அடைந்த குடும்ப உறுப்பினர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நடைபெற்ற போது அங்கிருந்த ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோவானது சமூக வலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#Horrific : A young man was crushed to death by a tractor over a land dispute in Rajasthan's Bharatpur. pic.twitter.com/yHRJVEDuPo
— Baba Banaras™ (@RealBababanaras) October 25, 2023