நடந்து முடிந்த இடைத்தேர்தல் – பாஜக கட்சியின் வருங்காலம் என்ன? 

0
96
#image_title

நடந்து முடிந்த இடைத்தேர்தல் – பாஜக கட்சியின் வருங்காலம் என்ன?

ஏழு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்து முடிந்து முடிவுகளும் வெளியாகி உள்ளது. இதன் அடிப்படையில் பார்த்தால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அந்தஸ்து கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு மக்கள் ஆதரவு பெருக்கி உள்ளது கவனிக்கத்தக்கது.

கடந்த 5ஆம் தேதி கேரளா, திரிபுரா, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய ஆறு மாநிலங்களில் ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. ஏழு தொகுதிகளுக்கான முடிவுகளும் நேற்று வெளியாகின. மூன்று தொகுதிகளில் மட்டும் பாஜக கட்சி வெற்றி பெற்றுள்ளது. மற்ற நான்கு தொகுதிகளிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்திய கூட்டணி அதிக வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

கேரளம் மாநிலம் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி தொகுதியான புதுப்பள்ளியில் நடந்த இடைத்தேர்தலில், அவரது மகன் சாண்டி உம்மன் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். கேரளாவின் புதுப்பள்ளித் தொகுதி இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் 10 சுற்றுகளாக எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் சாண்டி உம்மன் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். இந்திய தேசிய காங்கிரசின் சாண்டி உம்மன் 78,098 வாக்குகள் பெற்று 36,454 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். 41,644 வாக்குகளுடன் சி.பி.எம். கட்சி 2வது இடமும், பாஜக 6,447 வாக்குகளுடன் 3வது இடமும் பிடித்தன. காங்கிரஸ் தொடர்ந்து 50 ஆண்டுகளாக தன் வசமிருந்த இந்தத் தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

தும்ரி (ஜார்க்கண்ட்) ஜேம்எம்எம் கட்சி வெற்றி பெற்றுள்ளார். மேலும், துப்குரி (மேற்கு வங்கம்) – திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளார். பாகேஸ்வரம் (உத்தராகண்ட்) தொகுதியிலும், தன்பூர், போக்சாநகர் (திரிபுரா) தொகுதியிலும், பாகேஸ்வரம் (உத்தராகண்ட்) தொகுதியிலும் என 3 தொகுதி்இடைத்தேர்தலில் மட்டும் ஆளும் பாஜக வெற்றிபெற்று உள்ளது.

மொத்தமாக நடைபெற்ற இடைத்தேர்தலில் ஏழு தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று, மற்ற நான்கு தொகுதிகளில் இந்திய கூட்டணி கட்சிகள வெற்றி பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலும்

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி தான் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி தலைமையில் ஆட்சி அமைக்கும் என்றும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Previous article‘எதிர்நீச்சல்’ சீரியலில் இனி இவர் தான் ஆதி குணசேகரன்!! அவருடைய இடத்தை பூரித்தி செய்வாரா?
Next articleநான் மட்டும் அதை செய்திருந்தால் ரஷ்யா அழிந்திருக்கும் – எலான் மஸ்க் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!!