அரசுமுறை பயணமாக இந்தியா வந்த கம்போடிய மன்னர்! இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்தார்!
மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள கம்போடியா மன்னர் நெரோதம் ஷிகாமோனி இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று அதாவது மே 30ம் தேதி புது தில்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் கம்போடிய மன்னர் நெரோதன் ஷிகாமோனி அவர்களும் சந்தித்து பேசியுள்ளனர்.
இந்தியா மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே கடந்த 1952ம் ஆண்டு பரஸ்பரம் தூதரகம் தொடர்பாக நட்புறவு ஏற்பட்டது. கம்பேடியா இந்தியா நாடுகளுக்கு இடையே நட்புறவு ஏற்பட்டு 70 ஆண்டுகள் கடந்துவிட்டது. இதையடுத்து கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக கம்போடிய மன்னர் நெரோதம் ஷிகாமோனி அவர்கள் இந்தியா வந்துள்ளார்.
நேற்று புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்து பேசிய கம்போடிய மன்னர் நெரோதம் ஷிகாமோனி அவர்கள் தொடர்ந்து ஜனாதிபதி திரௌபதி முர்மு, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேசவுள்ளார்.